பொ:
உயிர், ந, ம, க, த, ப வரிசைப்பட்ட பன்னிரண்டெழுத்தும்; யா,
ஞா மட்டிலும் சகர வரிசையில்
ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சொ, சோ
என்னும் பத்தெழுத்தும் வ வரிசையில் வ, வா, வி,
வீ, வெ, வே, வை, வௌ
என்னும் எட்டும் தமிழில் சொல்லுக்கு முதலாக வரும் எழுத்துகளாம்.
வரிசை என்பது க முதல் கௌ வரை முடிய அமையும் வருக்கத்தை.
வி:
யாழ், ஞாலம்; பிறவற்றைத் தொகுத்துணர்க. ஞெகிழி நெகிழி
என்பதன் முதற்போலி. நன்னூலாசிரியர்
‘ங’ கரத்தை மொழி முதலாக்கக்
கரணியமாகிய அங்ஙனம், அங்கனம் என்பதன் திரிபே என்பது
மொழியறிஞர் முடிவு.
சொல்லிறுதி எழுத்து
26. நூ: எதவிர் பதினோ ருயிரும் மெய்யில்
னமன யரல வழள ஒன்பதும்
சொல்லின் இறுதியில் வருமெழுத்தாகும்.
பொருள் வெளிப்படை
முன்னூல்களில் கூறப்பெற்ற ந, ஞ, ங மூன்றும் சொல்வழக்கிறந்
தமையின் விடப்பட்டன.
27. நூ: அவற்றுள்,
எவ்வும் மற்ற உயிர்க்குறில் நான்கும்
அளபெடை ஒலியிலும் ஒளவென் நெடிலுயிர்
கவ மெய்யொடு கலப்பிலும் இறுமே.
சான்று எளிதில் அடையலாம்
பொ:
மேற்கூறிய சொல்லிறுதி எழுத்துக்களில் முன்வாராது என மறுத்த
எவ்வும் பிற நான்கு குறிலுயிர்களும்
நெடில் நீண்டுஒலிக்கும் அளபெடை
நீட்சியிலும், ஒளவென்னும் நெடில் க வவோடு கலந்து கௌ, வௌ
என்றும்
சொல்லுக்கு இறுதியாய் வரும்.
சொல்லிடை எழுத்து
28. நூ: கசதப தம்மெய் யோடு தாமும்
ரழ தம்மோ டன்றிப் பிறவொடும்
சொல்லின் இடையில் அடுத்தடுத்துறுமே.
பொ:
க, ச, த, ப என்னும் நான்கு மெய்யும் தம்மொடு தாமே
இரண்டுற நின்றும் ர, ழ என்னும் இரண்டு மெய்யும்
தம்மொடு தாம்
நில்லாது பிறமெய்களோடு நின்றும் ஒரு சொல்லிடையே அடுத்தடுத்து
இயலும்.
|