பொ:
ஆய்தத்தை, முன் அகரம் வைத்துப் பின் கம்மெய்யொடு
ஆனம், ஏனம் என்னும் குறியீடுகளைச் சேர்த்து
நன்கு ஒலிக்க.
சா:
அஃகானம், அஃகேனம்.
வி:
இவை இன்று வழக்கில் அக்கன்னா; அக்கேனா எனத் திரிந்து
வழங்கும். இவ்வொலித்திரிபே பின்
ஆவன்னா, ஆனா என்று உயிரையும்,
காவன்னா, கானா என்று உயிர்மெயையும், இக்கன்னா. இங்ஙன்னா
என்று
மெய்களையும் ஒலிக்கப் பயன்படுகின்றன. இவ்வோரெழுத்திற்குரிய
துணையொலி பிற எழுத்தனைத்தையும்
மக்கட் போக்கால் தழுவியது
வேண்டாமை பற்றியே இங்கு கூறாது விடப்பட்டன.
24. நூ: ன - றன் னகரம்; ண - டண் ணகரம்;
ந - தந் நகரம்; ழ - தமிழ் ழகரம்;
லவ்வே ஒற்றல்; ளவ்வோ வருடல்;
ரவ்வாம் இடையினம்; றம்மெய் வல்லினம்
எனத்தனி மெய்யினைச் சுட்டிக் கூறலாம்.
பொ:
வல்லினத்திற்கு இனமாய் மெல்லொலியாதல்பற்றி ‘ன’ வை
றன்னகரம் என்றும், ‘ண’வை டண்ணகரம்
என்றும் ‘ந’வை தந்நகரம் என்றும்
கூறலாம். ழகரத்தை தமிழ்ழகரம் எனலாம். நாவின் ஓங்கியுயர்
நிலையில்
‘ல’ ஒற்றப் பிறத்தலான் ஒற்றல் லகரம் என்றும், ‘ள’ பிறப்போ
வருடலாகலான்
வருடல் ளகரம் என்றும் குறிக்கலாம். இனவேறுபட்டால்
இடையினரகரம் என்றும், வல்லின றகரமென்றும்
அமையும்.
வி:
இவ்வெழுத்துக்களை இவ்வாறு கூறுதல் நேரிதன்றாய்ப் பலுக்கிக்
கூறலே முறையாயினும் குழப்பிக்
கூறுவதைத் தவிர்க்கவும் தமிழ்மொழிக்குரிய
கடுமை என்று கருதல்ஒழியவும் இம்முறை கையாளப்படலாம்.
ல, ள
இவற்றைப் பன்முகமாக் கூறுவ தோய்ந்து இம்முறை கூறல் நன்று. தமிழ்
ழகரத்தைப் பிறமொழியில்
இன்மை பற்றிச் சிறப்பு ழகரம் என்றல் பிரெஞ்சு,
உருசியம் முதலியவற்றுண்மை நோக்கி நீக்கினேம்;
எனினும் நேரொலி
இன்மையான் ஓரோர்வழிக் கூறினும் பிழையன்று.
சொல் முதலெழுத்து
25. நூ: உயிர்நம கதப வரிசைபன் னிரண்டும்
ஆவொடு மட்டே யகரமும் ஞகரமும்
ஐ ஒள எனுமிரண் டல்லாச் சகரமும்
உஊ ஒஓ நான்கலா வகரமும்
சொல்முத லாகும் தமிழெழுத்தாகும்.
|