பக்கம் எண் :
 
தட

    தட்டோர்=தள்+ட்+ஓர்=ள்-ட் (தளைத்தோர்-புறம்-30).  (தட்டு நின்றலின்
தளையே யா. கா) தள்ளாதபருவம் என்பது இப்பொருள் பற்றியது.

    உண்டான், தின்றான் என்றவிடத்து முதனிலை எத்திரிபும் அடைந்தில
எனக்கொள்க.  முதனிலையின் முன் திரிபுகளும் திரிபில் அடங்கும்.  டகரத்
திரிபு அருகிய வழக்கு வணங்கினான்-வணக்கினான் எனத் தன் வினை பிற
வினையிடை, வணங்கு-வணக்கு எனப் பிரித்துப் பின்னது ங்-க்-பிறவினைத்திரிபு என்றே கூறல் வேண்டும்.

    விரி: உண்மையில் தகர இடைநிலையே ல், ள், ன், ண் இறுதிநிலை
முதனிலைகட்கு முன்வந்து ற், ட் ஆக மாறியது என்பதைப் புணரியல்
வழியினும் மொழியியல் வழியினும் மெய்ம்மையாதலைப் பயிற்சிப்போக்கில்
புரிந்துகொள்க.  இங்குரைத்தவை புகுவாயர்க்கு எளிமை பொதிந்ததும்
வறிநூல் ஆசிரியரைத்தழீஇச் சென்றதும் ஆம்.

சாரியை

175. நூ: இடைநிலை இறுதி நிலைகட் கிடையில்
       சார்ந்தியை வதுசொற் சாரியை ஈங்கே

    பொ: இடைநிலைக்கும் இறுநிலைக்கும் இடையில், அவை
ஒத்தொலிக்கும் பொருட்டுச் சார்ந்து இயைவது சாரியையாம்.  (இங்குக் கூறும்
சாரியை சொற்களிடையேயும் பயில்வதைப் புணரியலிற்காண்க என்றவாறு.)

176. நூ: அத்துஅம் அன் இன் அற்று தன் தம்
       அ,ஐ,உ ன,கு சாரியை யுட்சில.

    பொ: கூறிய பன்னிரண்டும் சாரியைகளுன் பெரிதும் பயின்றுவரும்
சிலவாம்.

    வடக்கத்தியான், ஆட்டம், நடந்தனன், ஓடின, அவற்றை, என்றன்,
நுந்தம், நடந்தது, மற்றையான், சீயக்காய் (கண்ணநீர்), எண்ணுதல், கோன்,
செய்குவன்.  செய்குவன் என்பதில் இடைநிலைக்கு முன்வந்தது சாரியை.
பதிற்றுப்பத்தில் இற்றுவந்தது போலும் பிறசிறு வழக்குச் சாரியையுள.

177. நூ: மூன்றிட இறுதி நிலைகளுள் குறில் உயிர்
       சேர்வறின் நிகழ்விறப் பினில்அன் சாரியை.

    பொ: மூன்றிடத்துக்குரிய இருதிணை ஐம்பால்இறுதி நிலைகளில்
உயிர்க்குறில் எழுத்து முதலாகவுள்ள இறுதிநிலைகள் இடைநிலையோடு
சேருங்கால் நிகழ்காலத்தும் இறந்தகாலத்தும் ‘அன்’னே சாரியையாகும்.

    ஒன்றன் து,று உயிரன்மையானும், முன்னிலை ‘உம்’ நெடு
வழக்கன்மையானும் விடுக்க.  முன்னிலை ‘ஐ’ ஆய் எனத்திரிதலானும், குறுகி
நடத்தல் உளதாகலானும் அதனை உட்படுத்துக.