எழுத்ததிகாரம் | 123 | முத்துவீரியம் |
(இ-ள்.) நூறென்னும்
எண்ணினோடு அளவுப் பெயரும் நிறைப் பெயரும் வந்து
புணரின்
மிக்குமுடியும்.
(வ-று.) நூற்றுக்கலம்,
நூற்றுக்கழஞ்சு. (295)
ஒருபஃது முதலாகிய
பெயர்களின் முன் ஒன்று முதலியன
455. ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி
ஒன்றுமுத லொன்பாற்
கொற்றிடை மிகுமே.
(இ-ள்.) ஒன்றுமுதல்
எட்டீறாகப் பத்தேறியொரு சொல்லாய் நின்ற
வொருபது
முதலாகிய எண்கள் ஒன்றுமுதல் ஒன்பான்கள் வரின் மிகும்.
(வ-று.) இருபத்தொன்று,
இருபத்திரண்டு, இருபத்து மூன்று (296)
456. ஆயிரம் வரினே
யின்னே சாரியை
ஆவயி னோற்றிடை மிகாதியல் பாகும்.
(இ-ள்.) அவ்வொன்று
முதலாகிய பத்தூர்கிளவி ஆயிரத்தினோடு புணரி
னின்சாரியை
பெறும், ஆயிடைத் தகரமெய் மிகாதியல்பாம்.
(வ-று.) பதினாயிரம்,
இருபதினாயிரம். (297)
457. அளவு நிறையு மாயிய
றிரியா.1
(இ-ள்.) அளவுப்பெயரு
நிறைப்பெயரும் புணரின் மிகும்.
(வ-று.) நூற்றுக்கலம்,
நூற்றுக்கழஞ்சு. (298)
புணரியன் முற்றும்.
எழுத்ததிகாரம் முற்றும்.
1. தொல். எழுத். குற்றிய -
71.
|