எழுத்ததிகாரம் | 122 | முத்துவீரியம் |
ஒன்பதின்முன் ஆயிரம்
450. ஒன்பா னின்னொடு
வருமென மொழிப.
(இ-ள்.) ஒன்பதென்னும் எண்
இன்சாரியை பெறுமென்க.
(வ-று.) ஒன்பதினாயிரம்.
(291)
ஒன்று, இரண்டன்முன்
நூறாயிரம்
451. நூறா யிரம்வரி
னியல்பா கும்மே.
(இ-ள்.) நூறாயிரமென்னும்
எண்வரின் இயல்பாமெனவறிக.
(வ-று.) ஒருநூறாயிரம்,
இருநூறாயிரம். (292)
நூறு என்பதன் முன் ஒன்று
முதல் ஒன்பான்
452. நூறென் கிளவி யொன்றுமுத லொன்பாற்
றீறுசினை யொழிய
வினவொற்று மிகுமே.1
(இ-ள்.) நூறென்னும்
எண்ணுப்பெயர் ஒன்றுமுதல் ஒன்பான்களோடு
புணருங்காலீறாகிய
குற்றியலுகரங் கெடாது அதற்கினமாகிய றகரமெய் மிக்குமுடியும்.
(வ-று.) நூற்றொன்று,
நூற்றிரண்டு. (293)
நூறு என்பதன் முன்
ஒருபஃதும் இருபஃதும்
453. அவையூர் பத்தினு
மத்தொழிற் றாகும்.2
(இ-ள்.) அந்நூறென்பது
நின்று முற்கூறிய ஒன்று முதலொன்பானெண்களை
ஊர்ந்துவந்த
பத்தென்பதனோடு புணருங்கால்
ஈறுசினையொழிய இனவொற்றுமிகும்.
(வ-று.) நூற்றொருபஃது,
நூற்றிருபஃது. (294)
நூறு என்பதன் முன் அளவும்
நிறையும்
454. அளவொடு நிறைவரி
னவ்விய னிலையும்.
1. தொல் - எழுத் - குற்றிய
- 66.
2. தொல் - எழுத் - குற்றிய
- 67.
|