பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்121முத்துவீரியம்

ஒன்று இரண்டின்முன் ஆயிரம்

445. உகரங் கெடுமுத லோடு மிரண்டு
     மாயிர முன்வருங் காலை யான.

(இ-ள்.) ஆயிரமென்னும் எண்வரின் ஒன்றென்னும் எண்ணின் உகரமும்
இரண்டென்னும் எண்ணின் உகரமுங் கெடும்.

(வ-று.) ஓராயிரம், ஈராயிரம். (286)

மூன்றன் மெய்

446. மூன்றன் மெய்யே வகார மாகும்.

(இ-ள்.) மூன்றென்னும் எண்ணின் னகரமெய் வகரமெய்யாகத் திரியுமென்க.

(வ-று.) மூவாயிரம். (287)

நான்கன் மெய்

447. நான்கன் மெய்யே லகார மாகும்.

(இ-ள்.) நான்கென்னும் எண்ணினகரம் லகரமெய்யாகத் திரியுமென்க.

(வ-று.) நாலாயிரம். (288)

ஐந்தன் மெய்

448. ஐந்தன் மெய்யே யகார மாகும்.

(இ-ள்.) ஐந்தென்னும் எண்ணின் நகரம் யகரமெய்யாகத் திரியுமென்க.

(வ-று.) ஐயாயிரம். (289)

ஆறு என்பதன் முன் ஆயிரம்

449. ஆறென் கிளவி யதனிலை திரியா.

(இ-ள்.) ஆறென்னும் எண் அதனிலை கெடாவாம்.

(வ-று.) ஆறாயிரம். (290)