பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்125முத்துவீரியம்

(இ-ள்.) அச்சொல் பெயர்ச்சொல்லெனவும், வினைச்சொல்லெனவும், இடைச்சொல்
லெனவும், உரிச்சொல் லெனவும் நான்கு வகைப்படுமென்றுணர்க. (4)

பெயர்

462. அவற்றுள்,
     பெயரெனப் படுபவை தெரியுங் காலை
     உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையும்
     ஆயிரு திணைக்கு மோரன்ன வுரிமையும்
     ஆகு மென்மனா ரறிந்திசி னோரே.

(இ-ள்.) மேற்கூறிப்போந்த பெயர்வினை யிடையுரியாகிய நான்கனுட் பெயரென்று
கூறப்படுவது - உயர்திணைக்குரியவாய் வருவனவும், அஃறிணைக்குரியவாய் வருவனவும்,
இருதிணைக்கும் ஒத்த வுரிமையாய் வருவனவுமாகிய மூன்று வேறுபாட்டனவாம். (5)

சொல்லாவது யாது

463. ஓருரை தொடர்பொது வுரைபடு மிருதிணை
     ஐம்பான் மூவிட மறுவகை வழக்கு
     வெளிப்படை குறிப்பின் விளக்குவ துரையே.

(இ-ள்.) ஒருமொழியும், தொடர்மொழியும், பொதுமொழியும், இருதிணையாகிய
ஐம்பாலும், மூவிடனும், அறுவகை வழக்கும் வெளிப்படையானும் குறிப்பானும் விளக்குவது
சொல்லாம்.(6)

ஒருமொழி

464. ஒருபொருள் பயப்ப தோருரை யாகும்.

(இ-ள்.) ஒருபொருளைத்தருவது ஒருமொழியாம் என்க.

(வ-று.) நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம். (7)

தொடர் மொழி

465. பலபொருள் பயப்பது தொடர்சொற் கிளவி.

(இ-ள்.) பலபொருளைத் தருவது தொடர்மொழியாகும்.

(வ-று.) நிலங்கடந்தான், நிலத்தைக்கடந்தமால். (8)