சொல்லதிகாரம் | 159 | முத்துவீரியம் |
தொழிற்பெயர்
விளியேற்குமாறு
578. தொழிற்பெயர்க்
கிளவி யேயொடு சிவணும்.
(இ-ள்.) தொழிற்
பெயர்க்கு ஈரோடு ஏகாரமும் வந்து விளிக்கும்.
(வ-று.) வந்தார், வந்தீரே.
(121)
பண்புப்பெயர்
விளியேற்குமாறு
579. பண்புப் பெயரு
மவ்வியல் பாகும்.
(இ-ள்.) பண்புப் பெயரும்
ஏயொடு விளிக்குமென்க.
(வ-று.) கரியார், கரியீரே,
இளையீரே. (122)
அளபெடைப் பெயர்
விளியேற்குமாறு
580. 1 அளபெடைப் பெயரே
யளபெடை யியல.
(இ-ள்.) ரகரவீற்று
அளபெடைப்பெய ரியல்பாய் விளிக்கும்.
(வ-று.) சிறாஅஅர்,
மகாஅஅர். (123)
விளியேலாப் பெயர்கள்
581. அவரிவ ருவர்விளி
யடையா வாகும்.
(இ-ள்.) அவர், இவர், உவர்,
விளியேலா வாகும். (124)
இதுவுமது
582. யாவரு நீயிரு மவற்றோ
ரற்றே.
(இ-ள்.) யாவர், நீயிர்,
விளியே லாவாமென்க. (125)
ல, ள என்பன
விளியேற்குமாறு
583. லளக்களி னீற்றய
னீண்டு விளிக்கும்.
(இ-ள்.) ல, ள
க்களையீறாகிய பெயரீற்றய லெழுத்து நீண்டு
விளிக்கும்.
1. தொல் - சொல் - 149.
|