பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்161முத்துவீரியம்

(வ-று.) உழாஅஅல், கோஒஒள். (131)

பொதுப் பெயர் விளியேற்குமாறு

589. மெய்யுயி ரிறுதி விரவுப் பெயர்ச்சொல்
     உயர்திணைப் பெயரொடு மொத்து நடக்கும்.

(இ-ள்.) மெய்யையும் உயிரையும் ஈறாகிய பொதுப்பெயர் முற் கூறிய வுயர்திணை
நெறியான் விளியேற்கும்.

(வ-று.) சாத்தீ, பூண்டே, தந்தாய், எம்; சாத்தா, கூந்தால், மக்காள், எ-ம்; சாத்தி,
பூண்டு, தந்தை, சாத்த, பிறவுமன்ன. (132)

அஃறிணைப் பெயர் விளியேற்குமாறு

590. ஆவியு மொற்று மந்த மாகிய
     அஃறிணைப் பெயரெலா மேயொடு சிவணும்.

(இ-ள்.) உயிரையும் மெய்யையும் ஈறாகிய அஃறிணைப் பெயரெல்லாம் ஏகாரம்
பெற்று விளிக்குமென்க.

(வ-று.) மரமே, நரியே, புலியே, பிறவுமன்ன. (133)

அம்ம என்பது விளியேற்குமாறு

591. அம்ம வசைச்சொ னீட்டமும் விளிக்கும்.

(இ-ள்.) அம்மவென்னும் அசைச்சொல்நீட்டமும் விளிக்கும்.

(வ-று.) அம்மாகொற்றா. (134)

சேய்மைக்கண் விளிக்குமாறு

592. இருதிணை மருங்கினு மெல்லாச் சொற்களுஞ்
     சேய்மையி னளவைக் கடந்துசென் றிசைக்கும்.

(இ-ள்.) இருதிணைக்கண்ணும் விளிக்குங்காற் சேய்மையில் தத்தமளவைக்
கடந்துசென்றொலிக்கும்.

(வ-று.) நம்பீ இ இ, நங்கா அய் பிறவுமன்ன. (135)

விளியேலாப் பெயர்கள்

593. தமர்நுமர் தமனுமன் றமணம ணுமள்விளி
     ஏலா நமர்நம ளென்பது மற்றே.