பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்163முத்துவீரியம்

என்பதூஉம் வெளிப்படக் காலம் விளக்காதன குறிப்பு வினையென்பதூஉம் பெற்றாம்.

(வ-று.) தெரிநிலைவினை - உண்டான், உண்ணாநின்றான், உண்பான்; குறிப்புவினை -
கரியன். காலமொடு தோன்றுங்கால், பண்டுகரியன், இப்பொழுதுகரியன், நாளைக்கரியன் என
மூன்று காலமும் வருதலுமறிக. (3)

வினை முத்திணைக்கும் வருமாறு

597. குறிப்பினும் வினையினுந் தோன்றிக் காலமொடு
     வரும்வினைச் சொல்லெலா முயர்திணைக் குரிமையும்
     அஃறிணைக் குரிமையு மாமிரு திணைக்கும்
     ஒப்ப வுரிமையு மெனமுக் கூற்றன.

(இ-ள்.) குறிப்புப் பொருண்மைக்கண்ணும், தொழிற் பொருண்மைக்கண்ணும் தோன்றிக்
காலத்தோடு வரும் எல்லா வினைச்சொல்லும் உயர்திணைக் குரியனவும், அஃறிணைக்
குரியனவும், இரண்டுதிணைக்கும் ஒப்ப வுரியனவும் என மூன்று கூற்றனவாந்
தோன்றுநெறிக்கண்.

(வ-று.) கரியன், செய்யன் என்புழி, தொழின்மை தெற்றென விளங்காது குறித்துக்
கொள்ளப்படுதலிற் குறிப்பென்றார். உண்டான், கரியன்; சென்றது; செய்யது; வந்தனை
வெளியை. (4)

தன்மைப்பன்மை வினைமுற்று

598. அம்மா மென்பன விறுதிக் கிளவியும்
     கும்டும் தும்றும் மிறுதிக் கிளவியும்
     பன்மை யுணர்த்துந் தன்மைப் பெயரே.

(இ-ள்.) மேல் மூவகையவெனப்பட்ட வினைச்சொற்கள்தாம் அம், ஆம், எம், ஏம்
என்னுமீற்றவாகிய மொழியும், கும், டும், தும், றும் என்னுமீற்றவாகிய மொழியுமாகிய எட்டும்
பன்மையுணர்த்துந் தன்மைச்சொல்லா மென்க.

(வ-று.) உண்டனம், உண்டாம், உண்டனெம், உண்டேம், உண்கும், வந்தும், சென்றும்,
வருதும் யாம். (5)

அம், ஆம்

599. அவற்றுள்,
     அம்மா மென்பன முன்னிலை யொடும்வரும்.