சொல்லதிகாரம் | 164 | முத்துவீரியம் |
(இ-ள்.) முற்கூறிய எட்டனுள்
அம், ஆம் என்கிற இரண்டீறுந் தன்னிலையில்
நிற்கையன்றி முன்னிலையையும் உடன்படுக்கும்.
(வ-று.) உண்டனம், உண்டாம்,
யாம், யானும்; நீயும். (6)
எம், ஏம்
600. எம்மேம் படர்க்கை
யிடத்தையு மேற்கும்.
(இ-ள்.) எம், ஏம் என்கிற
இரண்டீறும், தன்னிலையில் நிற்கையன்றிப்
படர்க்கையையும் உடன்படுக்கும்.
(வ-று.) உண்டனெம்,
உண்டேம், யாம்; யானும் அவனும். (7)
கும், டும், தும், றும்
601. கும்டும் தும்றும்
மாகிய நான்கும்
படர்க்கைமுன்
னிலையொடும் படரு மென்ப.
(இ-ள்.) கும், டும், தும், றும் ஆகிய நான்கீறும்
தன்னிலையில் நிற்கையன்றி,
முன்னிலையும் படர்க்கையும் உடன்படுக்கும்.
(வ-று.) உண்கும், உண்டும்,
வருதும், சேறும், யாம்; யானும், நீயும் அவனும். (8)
தன்மை ஒருமை வினைமுற்று
602. குடுதுறு வென்னுங்
குன்றிய லுகர
இறுதியு மென்னே னல்லிறு கிளவியுந்
தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே.
(இ-ள்.) கு, டு, து, று என்னுங்
குற்றியலுகரத்தை யிறுதியாகிய மொழியும், என், ஏன்,
அல் என்னும் ஈற்றவாகிய மொழியும் ஒருமையைத்
தெரிவிக்குந் தன்மைக்கிளவியாம்.
(வ-று.) உண்கு, உண்டு, வருது, சேறு, உண்டனென்,
உண்டேன், உண்பல். (9)
செய்கு
603. செய்கென் கிளவி வினையொடு முடியினும்
விளம்பிய முற்றா
மென்மனார் புலவர்.
|