சொல்லதிகாரம் | 172 | முத்துவீரியம் |
(இ-ள்.) மேற்கூறியவற்றுள் செய்து,
செய்யூ, செய்பு, தம்வினை முதல்வினையான்
முடியும்.
(வ-று.) உண்டு வந்தான்,
உண்ணூவந்தான், உண்குபு வந்தான். (32)
சினைவினை சினையொடும்
முதலொடும் வருதல்
626. அம்முப் பெயருஞ்
சினைவினை நின்று
சினைவினை யொடுமுடி யாது முதலொடு
முடியினும் வினையா
னொருதன் மையவே.
(இ-ள்.) வினைமுதன்
முடிபினவா யம்மூன்று மொழியுஞ் சினையென நின்று
சினைவினையோடு முடியாது முதல்வினையோடு முடியினும்
வினையா னொருதன்மையவாம்.
(வ-று.) கையிற்று
வீழ்ந்தான், கையிறூவீழ்ந்தான், கையிறுபு
வீழ்ந்தான்.
(வி-ரை.) கையிற்று
வீழ்ந்தான் என்புழிக் கைஎன்பது சினையாகும்.
அதனது எச்சம்
இற்று என்பதாகும். அஃது இறந்த
காலத்தை யுணர்த்தும் செய்து என்னும் எச்சத்தினை
ஏற்றதாகிய கை என்னும் சினைச்சொல் தனக்குரிய
வினையால் முடிந்தால் வீழ்ந்தது என்று
முடியும். அங்ஙனமின்றித் தனக்குரிய முதல் வினையால்
முடிந்தால் வீழ்ந்தான் என்று
முடியும். தன் வினையையே கொண்டு முடியவேண்டிய செய்தெனெச்சம்
சினைச்சொல்லில்
வருங்கால் அதன் முதல் வினையொடு முடியினும் சினையொடு
முதற்கு ஒற்றுமை
யுண்மையால் இழுக்கில்லை என்பது இவ்வுரையின் தெளிந்த
கருத்தாகும்.
‘சினைவினை சினையொடும்
முதலொடும் செறியும்’
என நன்னூலாரும் இதனை
அழகாக விளக்குமாறு காண்க. (தொல்-சொல்-இளம்-விளக்கவுரை
- 226) (33)
பிறவினை, முதல்
வினையால் முடிவன
627. செய்தெனச்
செய்யியர் செய்யிய செயிற்செய
செயற்குப் பிறவினை
முதலொடுஞ் சிவணும்.
(இ-ள்.) செய்தென,
செய்யியர், செய்யிய, செயின், செய, செயற்கு, இவை
பிறவினையோடும் முதல்வினையோடும் பொருந்தும்.
(வ-று.) மழை பெய்தெனப்
புகழ்பெற்றது, மழை பெய்தென மரங்குழைத்தது;
மழைபெய்யியர் பயிரெழுந்தது, மழைபெய்யியர்
பலிகொடுத்தார்; மழை பெய்யிய
முழங்கும், மழை
பெய்யிய வான் பழிச்சுதும்; மழை பெய்யிற்
குளநிறையும், மழை
பெய்யின் வள
|