பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்173முத்துவீரியம்

மோங்கும்; மழை பெய்யப் புகழ்பெற்றது, மழை பெய்ய மரங்குழைத்தது; மழை பெயற்கு
முழங்கும், மழை பெயற்குக் கடவுள் வாழ்த்துதும். (34)

பெயரெச்சம்

628. 1 செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற்
       காலமுஞ் செயலுந் தோன்றிப் பாலொடு
       செய்வ தாதி யறுபொருட் பெயரும்
       எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே.

(இ-ள்.) செய்த, செய்கின்ற செய்யும் என்னு மூவகை மொழிகளிலே முக்காலமும்
தொழிலும் தோன்றிச் செய்பவன் முதலியவைகளொழிய நிற்பன பெயரெச்சவினைக்
குறிப்புகளாம்.

(வ-று.) உண்டசாத்தன், உண்கின்றசாத்தன், உண்ணுஞ்சாத்தன். (35)

பெயரெச்சத்திற்குரிய பொருண்மை

629. காலம் பொருணிலங் கருவி வினைமுதல்
     வினையோ ரறுவகைப் பொருட்கு முரிய.

(இ-ள்.) அப்பெயரெச்சம் காலமும், பொருளும், நிலமும், கருவியும், வினைமுதலும்,
வினையும் ஆகிய வாறு பொருட்கு மொத்த வுரிமையவாம்.

(வ-று.) துயிலுங்காலம், காலம்; ஓதும் பார்ப்பான், பொருள். பிறவுமன்ன. (36)

இடைப் பிறவரல்

630. தத்தங் குறைவா மிருவகைப் பெயருடன்
     இயையுங் குறிப்புடை யெச்சொ லாயினும்
     இடைநிலை வரையா ரென்மனார் புலவர்.

(இ-ள்.) தத்தமெச்சமாகிய பெயரொடும் வினையொடுமியையும் குறிப்பையுடைய
வெச்சொலாயினுந் தமக்கு நடுநிற்றலை நீக்காது கொள்வார் புலவர்.

(வ-று.) உழுது வந்தான், கொன்ற காட்டுள் யானை.

1. நன் - சொல் - வினை - 21.