பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்174முத்துவீரியம்

(வி-ரை.) பெயரெச்சமும் வினையெச்சமும் தாம்தாம் கொண்டு முடியும் பெயர்
வினைகளையே ஈண்டு எச்சம் என்கின்றார் ஆசிரியர். எச்சச் சொற்களுக்கும் அவற்றைக்
கொண்டு முடியும் பெயர் வினைகளுக்குமிடையே பொருந்தும் பிறசொற்கள் வருதலும் உள
என்பது இந்நூற்பாவின் கருத்தாம். இதனை நன்னூலார் இடைப் பிறவரல் என்பர்.
இங்ஙனமே, உருபுகளும் முற்றுக்களும் தாம்தாம் கொண்டு முடியும் சொற்களுக்கிடையே
பொருந்துவனவாய பிற சொற்கள் இடையே வருதலுமுள; அவற்றையும் ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்பதாம். நன்னூலாரும் இவற்றைத் தொகுத்தே,

‘உருபு முற்றுஈ ரெச்சம் கொள்ளும்
பெயர்வினை இடைப்பிற வரலுமாம் ஏற்பன’’ (பொது - 5)

என அழகாகக் கூறுதல் காண்க. (தொல் - சொல் - இளம் - விளக்கவுரை 232) (37)

எச்சங்கள் எதிர்மறுத்துரைப்பினும் பொருள்நிலை திரியாமை

631. பெயரும் வினையும் எதிர்மறுத் துரைப்பினும்
     பொருணிலை திரியா தெச்சக் கிளவி.

(இ-ள்.) பெயரெச்சமும் வினையெச்சமும் எதிர்மறுத்துக் கூறினும், அவ்வெச்சப்
பொருண்மையிற் றிரியாவாம்.

(வ-று.) உண்ணாவில்லம்; உண்ணாச்சோறு, உண்ணாக்காலம், வளையாக்கோல்,
ஓதாப்பார்ப்பான், உண்ணாவூன் எ-ம் உண்ணாது வந்தான், உண்ணா என்பது உண்ணும்
எனவரும். (38)

செய்யுமென்பதற்குச் சிறப்பு விதி

632. 1 செய்யுமென் னெச்சவீற் றுயிர்மெய் சேறலுஞ்
       செய்யுளு ளும்முந் தாதலு முற்றேல்
       உயிரு முயிர்மெய்யு மேகலு முளவே.

(இ-ள்.) செய்யுமென்னும் பெயரெச்சத் திறுதி யுயிர் மெய் கெடுதலும், பாவினுள், உம்
உந்தாகலும், அதுமுற்றாயின், உயிராயினும் உயிர்மெய்யாயினும் கெடுதலுமுளவாம்.

(வ-று.) வாவும்புரவி, வாம்புரவி, கூப்பெயர்க்கு ‘நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து’ (புறம்
- 395) கலுழும், கலுழ்ம்; மொழியுமே, மொழிமே. (குறுந் - 51) (39)

செய்தெனெச்சம்

633. செய்தெனு மெச்சத் திறந்த காலம்
      எய்தவும் பெறூஉ மெதிர்பொழு தென்ப.

1. நன் - சொல் - வினை - 22.