பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்175முத்துவீரியம்

(இ-ள்.) செய்தென்னும் வினையெச்சத்தின் இறந்தகாலம் எதிர்காலத்தைப் பொருந்தும்.

(வ-று.) நீ யுண்டுவருவாய், உழுதுவருவாய். (40)

முக்காலத்தினும் ஒத்தியல் பொருள்

634. 1 முக்கா லத்தினும் ஒத்தியல் பொருளைச்
       செப்புவர் நிகழுங் காலத் தானே.

(இ-ள்.) மூன்றுகாலத்தும் உளதாம் இயல்பையுடைய எல்லாப் பொருண்மையும்
நிகழுங்காலத்துப் பொருண்மையையுடைய செய்யுமென்னுஞ் சொல்லாற் கூறப்படும்.

(வ-று.) மலைநிற்கும், ஞாயிறியங்கும், திங்களியங்கும். (41)

காலமயக்கம்

635. நிகழ்வினு மெதிர்வினும் வரும்வினைக் கிளவி
     இறப்பினு முரைப்பர் விரைவிற் பொருள.

(இ-ள்.) நிகழ்காலத்தும் எதிர்காலத்தும் வரும் வினைச்சொற் பொருண்மையை
இறந்தகாலத்தினுங் கூறுவர், விரைவிற் பொருண்மையின்கண்.

(வ-று.) உண்டிலை, உண்டே னுண்டேன், எதிர்வு இறப்பாயிற்று. அவனொடுபகைக்கிற்
செத்தாய், எதிர்வு இறப்பாயிற்று. (42)

இதுவுமது

636. குறித்துப் போதரும் வினைமுத லில்லாக்
     காலை வினைமுத னிகழ்வினிற் செல்லும்.

(இ-ள்.) குறித்துவரும் வினைச்சொலில்லாதவிடத்து நிகழ்காலத்திற் செல்லும்.

(வ-று.) அவன் சுவர்க்கம்புகும், நிரயம்புகும். (43)

இது செயல்வேண்டும் என்னும் கிளவி

637. இதுசெயல் வேண்டு மென்னுங் கிளவி
     இருவயி னிலையும் பொருட்டா கும்மே.

1. நன் - பொது - 32.