பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்176முத்துவீரியம்

(இ-ள்.) இது செயல்வேண்டும் என்பதுபட வருமொழி தன்பாலானும், பிறன்பாலானும்
என ஈரிடத்தும் நிலைபெறும் பொருண்மையை யுடையனவாம்.

(வ-று.) ஓ ஓதல்வேண்டும், ஓதற்கு வினைமுதலாயினாற்கும், அவன் ஓதலைவிரும்புந்
தந்தைக்கு மேற்றவாறு காண்க. (44)

(வி-ரை.) ‘தன்பாலானும் பிறன்பாலானும்’ என்ற இறுதி வரியுடன் இந்நூற்பா
தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது.

வன்புற வரும் வினாவுடை வினைச்சொல்

638. வன்மைப் பொருள்வயின் வரும்வினா வினையை
     எதிர்மறுத் துரைப்பினு மிழுக்கா வாகும்.

(இ-ள்.) கடினப் பொருட்கண்வரும் வினாவையுடைய வினைச் சொல்லை
எதிர்மறுத்துரைப்பினுங் குற்றமிலவாம்.

(வ-று.) வைதாய், வைதேனோவென வினாவொடுவந்த வினைச்சொல்,
வைதிலேனென்னும் எதிர்மறைப்பொருள்பட வந்தமை காண்க. (45)

காலமயக்கம்

639. எதிர்விற் குரிய வினைச்சொற் கிளவி
     தெளிவு மியற்கையுஞ் செப்புங் காலை
     இறப்பினு நிகழ்வினு மியம்பப் படுமே.

(இ-ள்) எதிர்காலத்துக்குரிய வினைச்சொல்லைத் தெளிவுமியற்கையுங் கூறுங்கால்
இறந்தகாலச் சொல்லானும் நிகழ்காலச் சொல்லானுங்கூறுப.

(வ-று.) இக்காட்டிற் போகிற் கூறைகோட்பட்டான், கூறை கோட்படும் இயற்கை; எறும்பு
முட்டைகொண்டு திட்டையேறின், மழைபெய்தனூலாற் றெளிந்தான், அவை முட்டைகொண்டு
ஏறியவழி மழை பெய்யாமுன்னு மழை பெய்தது, மழைபெய்யும், தெளிவு. (46)

செயப்படுபொருள்

640. செயப்படு பொருளைச் செய்தது போலத்
     தொழிற்படக் கிளத்த றொல்லியன் மரபே.

(இ-ள்.) செயப்படு பொருளைச் செய்த வினைமுதலைப் போலத் தொழிற்படக் கூறல்
வழக்கின்க ணியலும்.