பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்177முத்துவீரியம்

(வ-று.) திண்ணைமெழுகிற்று. (47)

காலமயக்கம்

641. இறப்பு மெதிர்வு மயங்கியு மியலும்.

(இ-ள்.) இறந்தகாலமும் எதிர்காலமு மயங்கு மொழிப் பொருளனவாம்.

(வ-று.) இவர் பண்டு இப்பொழிற்கண் விளையாடுவார், நாளையவன் வாளோடு
வெகுண்டுவந்தான், பின் நீ யென்செய்குவை எனவரும். (48)

இதுவுமது

642. நிகழ்வு மவற்றொடு நிலவுதல் வரையார்.

(இ-ள்.) நிகழ்காலமு மவற்றொடு மயங்கும்.

(வ-று.) இவள் பண்டு இப்பொழிற்கண் விளையாடும் நாளைவரும். (49)

வினையியல் முற்றும்.

3. ஒழிபியல்

இடைச்சொல் பிறக்கும் இடம்

643. பெயர்வினை யிடத்துப் பிறப்ப திடைச்சொல்.

(இ-ள்.) பெயரிடத்தும் வினையிடத்துந் தோன்றுவது இடைச் சொல்லாமென்க. (1)

அதன் வகை

644. வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
     இசைநிறை யசைநிலை யிருமூன்று திறத்தன.

(இ-ள்.) ஐ முதலிய வாறுருபுகளும், அன் முதலிய சாரியை யுருபுகளும்,
போலமுதலிய வுவமையுருபுகளும், செய்யுளிசைநிறைத்து வருவனவும், அசைத்தலே
பொருளாக நிற்பனவும், அன், ஆன் முதலிய வினையுருபுகளும் ஆகிய ஆறு திறத்தனவாம்
அச்சொலென வறிக.