சொல்லதிகாரம் | 178 | முத்துவீரியம் |
(வ-று.) நம்பியை: பெயரின்
புறத்துறுப்பாய் ஐயுருபும், முடியினன்: அகத்துறுப்பாய்
விகுதியும் இடைநிலையும், உண்ணான்: வினையினகத்துறுப்பாய்
விகுதியுருபும் வந்தன. (2)
மன்
645. ஆக்கம் ஒழியிசை
கழிவையுங் தருமன்.
(இ-ள்.) மன்னென்னும் இடைச்சொல்,
ஆக்கங்குறித்து நிற்பதும், ஒழியிசைப்
பொருண்மையைக் குறித்து நிற்பதும், கழிவைக் குறித்து
நிற்பதும் ஆகிய மூன்றையுந்
தருமென வறிக.
(வ-று.) பண்டு காடுமன், ஆக்கம்; கூரியதோர்
வாண்மன், ஒழியிசை; சிறியகட்பெறினே
யெமக்கீயுமன்னே (புறம் - 235)
கழிவு. (3)
தில்
646. 1 விழைவே கால
மொழியிசை தில்லே.
(இ-ள்.) தில்லென்னு மிடைச்சொல்,
விழைவைக் குறித்து நிற்பதும் காலத்தைக்
குறித்து நிற்பதும், ஒழியிசையைக் குறித்து நிற்பதும்
ஆகிய மூன்றையுந் தரும்.
(வ-று.) ‘அரிவையைப் பெறுக
தில்லம்ம யானே’ (குறுந் - 14) விழைவு;
‘பெற்றாங்கறிக
தில்லம்ம’ (குறுந் - 18) காலம்; ‘வருகதில்லம்ம’
(அகம் - 276) ஒழியிசை.
(4)
கொன்
647. அச்சம் பயமிலி காலம் பெருமையென்
றப்பா னான்கே
கொன்னைக் கிளவி.
(இ-ள்.) கொன்னென்னும்
இடைச்சொல் அச்சப் பொருளதும், பயமின்மைப்
பொருளதும், காலப்பொருளதும், பெருமைப்பொருளது
மாகிய, நான்கையும் தரும்.
(வ-று.) ‘கொன்முனை
யிரவூர்போல’ (குறுந் - 91) அச்சம்; ‘கொன்னே
கழிந்தன்று,’
(நாலடி - 55) பயமின்மை; ‘கொன்வரல்
வாடை,’ காலம்; ‘கொன்னூர் துஞ்சினும்’ (குறுந் -
138). பெருமை. (5)
1. நன் - இடை - 12.
|