பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்179முத்துவீரியம்

உம்

648. எதிர்மறை யெச்சமுற் றெண்ணே தெரிநிலை
     ஐயஞ்சிறப் பாக்கமு மளிக்கு மும்மை.

(இ-ள்.) உம்மென்னு மிடைச்சொல், எதிர்மறையும் எச்சமும் முற்றும், எண்ணும்,
தெரிநிலையும், ஐயமும், சிறப்பும், ஆக்கமும் ஆகிய எட்டுப்பொருளையுந் தரும்.

(வ-று.) சாத்தன் வருதற்கு முரியன் - எதிர்மறை; சாத்தனும் வந்தான் - எச்சம்;
தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் - முற்று; நிலனு நீருந்தீயும் - எண்; திருமகளுமல்லள் -
‘தெரிநிலை; இளிவந்துஞ் சொல்லும்’ (கலி - 47) ஐயம்; குறவருமருளுங் குன்று. (மலைபடு
-275) சிறப்பு; ஆக்கம், வந்துழிக் காண்க. (6)

ஓகாரம்

649. தெரிநிலை யெதிர்மறை சிறப்புப் பிரிநிலை
     ஒழியிசை வினாவா றோகா ரம்மே.

(இ-ள்.) தெரிநிலையும், எதிர்மறையும், சிறப்பும், பிரிநிலையும், ஒழியிசையும்,
வினாவுமாகிய ஆறுபொருளையும் ஓவென்னும் இடைச்சொல் தரும்.

(வ-று.) திருமகளோவல்லள் - தெரிநிலை; சாத்தனுண்டானோ - எதிர்மறை; ஓ ஒ
பெரியன் - சிறப்பு; யானோ தேறேனவர் பொய் (குறுந் - 21) பிரிநிலை; கொளலோ
கொண்டான் - ஒழியிசை; சாத்தனுண்டானோ - வினா. (7)

ஏகாரம்

650. எண்ணே பிரிநிலை ஈற்றசை தேற்றம்
     வினாவோ ரைந்தும் விளக்கு மேகாரம்.

(இ-ள்.) ஏ யென்னும் இடைச்சொல்லும் எண்ணும், பிரிநிலையும், ஈற்றசையும்,
தேற்றமும், வினாவுமாகிய ஐந்து பொருளையுந் தருமென்க.

(வ-று.) நிலனே நீரே தீயே, எண்; அவருளிவனே கள்வன், பிரிநிலை; ‘காடிறந்தோரே’
(அகம் - 1) ஈற்றசை; உண்டே மறுமை, தேற்றம்; நீயே கொண்டாய், வினா எனவரும். (8)