சொல்லதிகாரம் | 182 | முத்துவீரியம் |
இயற்பெயர் முன்வரும் ஆர்
659. 1 இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி
பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடியும்.
(இ-ள்.) இயற்பெயர்
முன்வரும் ஆரென்னும் இடைச்சொல் பலரறிசொல்லான்
முடியும்.
(வ-று.) பெருஞ்சேந்தனார்
வந்தார். (17)
மேலதற்கோர்
சிறப்புவிதி
660. அசைநிலைப் பொருண்மை
யாகும்வழி யறிதல்.
(இ-ள்.) ஆரையென்னுஞ்
சொல், அசைநிலையாய் நிற்கு மறிக.
(வ-று.) ‘எல்லாவுயிரொடு
சொல்லுமார் முதலே.’ (தொல் - எழுத் - 41) (18)
ஏ, குரை
661. ஏவுங் குரையு மிசைநிறை
யசைநிலை.
(இ-ள்.) ஏயென்னும்
இடைச்சொல்லும், குரை என்னும் இடைச்சொல்லும்,
இசை
நிறையும் அசை நிலையுந் தரும்.
(வ-று.) ‘ஏ ஏ யிஃதொத்தன்’
(கலி - 62) இசை நிறை; ஏ ஏ யெனக் கூறுக. அசை
நிலை; ‘பெறலருங்
குரைத்தே’. (புறம்.5) இசை நிறை; ‘பல்குரைத்
துன்பங்கள்’,
(குறள்-1045) அசைநிலை. (19)
மா
662. 2 மாவென் கிளவி
வியங்கோ ளசைச்சொல்.
(இ-ள்.) மாவென்னு
மிடைச்சொல் வியங்கோ ளசைநிலையாம்.
(வ-று.) உண்கமா
கொற்கையோனே. (20)
முன்னிலை யசைச்
சொற்கள்
663. இகுமியா யிகமதி
மோசின் முன்னிலை
அசைச்சொல் லென்மனா ரறிந்திசி னாரே.
1. தொல் - சொல் - இடை -
22.
2. ,, ,, ,, 25.
|