சொல்லதிகாரம் | 181 | முத்துவீரியம் |
(இ-ள்.) எற்றென்னும்
இடைச்சொல் இறந்த பொருளைத் தரும்.
(வ-று.) எற்றெனுடம்பி
னெழில் எனவரும். (12)
மன்ற
655. மன்றக் கிளவி
தெளிவை விளக்கும்.
(இ-ள்.) மன்றவென்னும்
இடைச்சொல் தெளிவுப் பொருண்மையைத் தரும்.
(வ-று.) ‘கடவுளாயினு’மாக
மடவை மன்றவாழிய முருகே (நற்-34) எனவரும். (13)
தஞ்சம்
656. 1 தஞ்சக் கிளவி
யெண்மைப் பொருட்டே.
(இ-ள்.) தஞ்சமென்னுஞ்
சொல் எளிமைப் பொருளைத் தரும்.
(வ-று.) ‘முரசுகெழு
தாயத்தரசோ தஞ்சம்’ (புறம் - 73). (14)
அந்தில்
657. அந்திலாங் கசைநிலை
இடப்பொரு ளவ்வே.
(இ-ள்.) அந்திலென்னும் இடைச்சொல்லும்,
ஆங்கென்பதும், அசைநிலைப்
பொருளையும் இடப்பொருளையும், தருவனவாம்.
(வ-று.) ‘அந்திற்
கச்சினன் கழலினன் (அகம் - 76) அசைநிலை; சேயிழை
யந்திற்
கொழுநற் காணிய (குறுந் - 293) இடம். (15)
கொல், எல்
658. கொல்லே யைய மெல்லே
விளக்கம்.
(இ-ள்.) கொல்லென்னும்
இடைச்சொல் ஐயப்பொருளையும், எல்லென்னும்
இடைச்சொல் விளக்கப் பொருளையுந் தரும்.
(வ-று.) குற்றிகொல், ஐயம்;
எல்வளைத்தோளி, விளக்கம். (16)
1. தொல் - சொல், இடை - 18.
|