பொருளதிகாரம் | 227 | முத்துவீரியம் |
என்பது, வேதநூல் அல்லாத பிறவாகிய
நூல்களெல்லாம் முற்கூறிய அந்தணர்
முதலிய நான்கு வருணத்தார்க்கு முரியன. (44)
அரசர், வணிகர்,
வேளாளர்க்குரிய தொழில்கள்
813. அயில்வே லத்திர
மவாவொடு பயிறல்
கலினவாம் புரவி கரிதே ரூர்தல்
உடைத்தொழி லவாக்கென
வுரைத்திசி னோரே.
என்பது, அத்திர சத்திர வித்தைத்
தொழிலைக் கற்றலும் யானையேற்றம்
குதிரையேற்றம் தேரேறிச் செலுத்தல் நாவினாற் கற்குந்தொழில்
அல்லாத தொழில்கள்
அந்தண ரொழித்தொழிந்த மூவர்க்கு முரியன. (45)
காவற்பிரிவின் வகை
814. காவ லறப்புறங் காவலு நாடு
காவலு மெனவிரு வகைப்படு மெனலே.
என்பது, காவல் அறப்புறங்காவல் நாடுகாவல் என இரண்டு வகைப்படும்.
(46)
அறப்புறங்
காவற்குரியார்
815. 1 அவற்றுள்,
அறப்புறங் காவ லனைவர்க்கு முரித்தே.
என்பது, முற்கூறியவற்றுள் அறப்புறங்
காவல் அந்தணர் முதலிய நால்வர்க்கு முரியன.
(47)
நாடுகாவற்குரியார்
816. ஏனைய காவ லிறைவர்க்
குரிய.
என்பது, நாடுகாவல்
அரையருக்குரியன. (48)
தூதிற்குரியார்
817. இருபிறப் பாள ரிறைவரென்
றிருவர்க்குந்
தூது போதற் றொழிலுரித் தாகும்.
1. நம்பியகப்பொருள் -
அகம் - 73.
|