பக்கம் எண் :
 
பொருளதிகாரம்230முத்துவீரியம்

(வி-ரை.) 821 முதல் இந்நூற்பா வரையுள்ள கருத்துக்கள்

‘‘வெட்சி நிரைகவர்தன் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேற் செல்லுதல் வஞ்சியா-முட்கா
தெதிரூன்றல் காஞ்சி யெயில்காத்த னொச்சி
யதுவளைத்த லாகு முழிஞை-யதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்தி லொன்னார்
செருவென் றதுவாகை யாம்’’

என்னும் நூற்பாவில் சுருங்க உரைக்கப்பட்டுள்ளமை காண்க. (60)

அகவொழுக்கவியல் முற்றும்.

2. களவொழுக்கவியல்

1. கைகோள் இரண்டு

829. அளவி லின்பத் தைந்திணை மருங்கிற்
     களவுகற் பெனவிரு கைகோள் வழங்கும்.

என்பது, அளவில்லாத இன்பத்தையுடைய குறிஞ்சி முதலிய ஐந்திணைக்கண் களவு
கற்பு எனவிரண்டு கைகோள் வழங்கும்.

(வி-ரை.) கைகோள் - கொள்ளப்படும் ஒழுக்கம். (1)

2. மன்றல் எட்டு

830. அவற்றுள் களவந் தணர்மறை மன்றல்
     எட்டனுள் யாழோ ரியல்பின தாகும்.

என்பது, முற்கூறிய இரண்டனுள் களவாவது பூசுரர்வேதம் ஓரிடத்துக்கூறிய
கலியாணம், பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம்
பைசாசம் எட்டனுள் யாழினையுடைய பிரிவின்மையோரது தன்மையாம்.

என்னை?

‘‘இன்பமும் பொருளு மறனு மென்றாங்
கன்பொடு புணர்ந்த வைந்தினை மருங்கிற்
காமக் கூட்டங் காணுங் காலை