பக்கம் எண் :
 
பொருளதிகாரம்233முத்துவீரியம்

இயற்கைப் புணர்ச்சி தெய்வத்தி னெய்துழி
முயற்சி யின்றி முடிவ தாகும். நம்பி. 33

காட்சி யையந் துணிவுகுறிப் பறிவென
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை. நம்பி. 118

கலந்துழி மகிழ்தலு நலம்பா ராட்டலு
மேற்புற வணிதலு மென்னுமிம் மூன்றும்
போற்றிய தெய்வப் புணர்ச்சியின் விரியே. நம்பி. 125

நாட்ட மிரண்டு மறிவுடன் படுத்தற்குக்
கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும். (தொல் - கள 5)

என்றாராகலின்.

(வி-ரை.) 831 முதல் இந்நூற்பாவரையுள்ள உரைகள் நச்சினார்க்கினியர் உரையை
முழுதும் தழுவியுள்ளன. (5)

6. அகத்திணை நிகழ்ச்சி

834. 1 இயற்கை பாங்க னிடந்தலை மதியுடன்
       இருவரு முள்வழி யவன்வர வுணர்தன்
       முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தல்
       நன்னிலை நாண நடுங்க நாடல்
       மடல்குறை நயப்பு வழிச்சேட் படுத்தல்
       இடமிகு பகற்குறி யிரவுக் குறியோ
       டொருவழித் தணத்த லுடன்கொண் டேகல்
       வரைவு முடுக்கம் வரைபொருட் பிரிதன்
       மணஞ்சிறப் போதல் வார்புவி காவல்
       இணங்கலர்ப் பொருத்தல் வேந்தற் குற்றுழிப்
       பொருள்வயிற் பிரிதல் பரத்தையிற் பிரிதலென்
       றருள்வயிற் சிறந்த வகத்திணை மருங்கின்
       இருளறு நிகழ்ச்சி யிவையென மொழிப.

என்பது, இயற்கைப் புணர்ச்சி, பாங்கற்கூட்டம், இடந்தலைப்பாடு, மதியுடன்படுத்தல்,
இருவருமுள்வழி யவன்வர வுணர்தல், முன்னுறவுணர்தல் குறையுறவுணர்தல், நாணநாட்டம்,
நடுங்கநாட்டம், மடல், குறை நயப்பித்தல், சேட்படை, பகற்குறி, இரவுக்குறி,
ஒருவழித்தணத்தல், உடன்போக்கு, வரைவுமுடுக்கம், வரைபொருட் பிரிதல், மணஞ்
சிறப்புரைத்தல், ஓதற்பிரிதல், காவற்பிரிதல், பகைதணி வினைப்பிரிதல், வேந்தற்

1. திருக்கோவையார்.