பக்கம் எண் :
 
பொருளதிகாரம்239முத்துவீரியம்

பிரிவுணர்த்தல்

என்பது, ஐவகைப் புணர்ச்சியும் பெற்று ஒத்தவன்பினனாய் நின்ற தலைமகன், தனதா
தரவினால் நலம்பாராட்டக் கேட்டுத், தலைமகள் நாணி வருந்தாநிற்பக் கண்டு, அவட்குப்
பிரிவின்மை கூறல்.

(வ-று.)

சிந்தா மணிதெண் கடலமிர் தந்தில்லை யானருளால்
வந்தா லிகழப் படுமே மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை யானகன் றாற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோவென்னை வாட்டந் திருத்துவதே. (திருக். 12)

(கு-ரை.) சிந்தாகுலம் - மனவருத்தம். வாட்டந் திருத்துவது - வாட்டுவது;
ஒருசொன்னீர்மைத்து.

பருவரலறிதல்

என்பது, பிரிவின்மை கூறக்கேட்ட தலைமகள், பிரிவென்பதும் ஒன்றுண்டுபோலுமென
வுட்கொண்டு, முன்நாணினாற் சென்றெய்திய வருத்தநீங்கிப் பெரியதோர் வருத்தமெய்த, அது
கண்டிவள் மேலும் மேலும் வருந்துகின்றது பிரிந்தாற்கூடுதல் அரிதென்றோ? அறிகிலேனென
அவள் வருத்த மறியாநிற்றல்.

(வ-று.)

கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற கொற்றவன் சிற்றம் பலமனையாள்
நீங்கிற் புணர்வரி தென்றோ நெடிதிங்ங னேயிருந்தால்
ஆங்கிற் பழியா மெனவோ அறியேன் அயர்கின்றதே. (திருக். 13)

அருட்குணமுரைத்தல்

என்பது, இற்பழியாமென்று நினைந்தோ என்று கூறக்கேட்ட தலைமகள், இது
நந்தோழியறியின் என்னாங்கொலெனப் பிரிவுட் கொண்டு பிரிவாற்றாதுவருந்த,
அக்குறிப்பறிந்து, அவள் பிரிவுடம் படுவது காரணமாகத் தலைமகன் யாம பிரிந்தேமாயினும்
பிரிவில்லை யெனத் தெய்வவருள் கூறல்.