பக்கம் எண் :
 
பொருளதிகாரம்240முத்துவீரியம்

(வ-று.)

தேவரிற் பெற்றநம் செல்வக் கடிவடி வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப் பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம் பலமணி மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென் வாடிப் புலம்புவதே. (திருக். 14)

(கு-ரை.) தேவரிற் பெற்றகடி - தெய்வத்தால் பெற்ற அழகிய மணம். முக்கண் மூவரிற்
பெற்றவர் - கதிரவன், மதி, தீ ஆகிய மூன்றையும் மூன்று கண்களாகப் பெற்றவர். குழலி -
விளிப் பொருட்டு.

இடமணித்தென்றல்

என்பது, அருட்குணங்கூறி வற்புறுத்தவும் ஆற்றாமை நீங்காத தலைமகட்கு
நும்மூரிடத்திற் கெம்மூரிடமித் தன்மைத்தெனத் தன்னூரினணிமை கூறி வற்புறுத்தல்,

(வ-று.)

வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக மேய்க்குங் கனங்குழையே. (திருக். 15)

(கு-ரை.) வரும் குன்றம் - யானை. வெண்ணிறக் கஞ்சுகம் - வெண்மை நிறமான
சட்டை.

ஆடிடத்துய்த்தல்

என்பது, அணிமைகூறி நீங்கினோன், இனி நீ முற்பட்டு விளையாடு,
யானிங்ஙனம்போய் அங்ஙனம் வருகிறேனென அவளை யாடிடத் துய்த்தல்.

(வ-று.)

தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய்முன்னி யாடுபின் யானளவா
ஒளிவளர் தில்லை யொருவன் கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரற் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே. (திருக். 16)