பக்கம் எண் :
 
பொருளதிகாரம்249முத்துவீரியம்

மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேலகண் டேனொன்று நின்றதுவே. (திருக். 34)

(கு-ரை.) பணம் - படம். பிடிகரி உன்னிப் புனத்தயலே நின்றது கண்டேன் எனப்
பிடிமேல் வைத்துத் தலைவியது நிலை கூறியவாறு.

செவ்விசெப்பல்

என்பது, பிடிமிசை வைத்துக் கூறக்கேட்ட தலைமகன், தனக்குச் செவ்வி போதாமையிற்
பின்னும் ஆற்றாமை நீங்கானாயினான், அது கண்டு அவனை யாற்றுவிப்பது காரணமாக
அவனுக்கு அவயவம் கூறாநிற்றல்.

(வ-று.)

கயலுள வேகம லத்தலர் மீது கனிபவளத்
தயலுள வேமுத்த மொத்த நிரையர னம்பலத்தின்
இயலுள வேயிணைச் செப்புவெற் பாநின தீர்ங்கொடிமேற்
புயலுள வேமலர் சூழ்ந்திருள் தூங்கிப் புரள்வனவே. (திருக். 35)

அவ்விடத்தேகல்

என்பது, செவ்வி செப்பக்கேட்ட தலைமகன், இவ்வாறு காணப்பட்டது உண்டாயின்,
அஃது என்னுயிரெனத் தான் அவ்விட நோக்கிப்போதல்.

(வ-று.)

எயிற்குல மூன்றிருந் தீயெய்த வெய்தவன் தில்லையொத்துக்
குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தநிரைத்
தயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி அனநடக்கும்
மயிற்குலங் கண்டதுண் டேலது வென்னுடை மன்னுயிரே. (திருக். 36)

மின்னிடைமெலிதல்

என்பது, நெருநல் தலையளிசெய்து, நின்னிற்பிரியேன், பிரியினும் ஆற்றேன் என்று
கூறிப் பிரிந்தவர், வேட்கை மிகுதியால் இடமறியாது ஆயத்திடை வருவார் கொல்லோ
என்னும் பெருநாணினானும், ஆற்றாமையான் இறந்து பட்டார் கொல்லோ வென்னும்
பேரச்சத்தினானும், யாருமில்லொரு