பொருளதிகாரம் | 250 | முத்துவீரியம் |
சிறைத்தனியே நின்று, தலைமகனை நினைந்து,
தலைமகன் மெலியா நிற்றல்.
(வ-று.)
ஆவியன் னாய்கவ லேலக லேமென்
றளித்தொளித்த
ஆவியன் னார்மிக்க வாவின
ராய்க்கெழு மற்கழிவுற்
றாவியன் னார்மன்னி யாடிடஞ் சேர்வர்கொல்
அம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி லாயத்
தருவரையே. (திருக். 37)
பொழில்கண்டுமகிழ்தல்
என்பது, தலைமகளை நோக்கிச் செல்லாநின்ற
தலைமகன், முன்னைநா ளவளைக்
கண்ணுற்ற பொழிலைச்
சென்றணைந்து, பொழிலிடை யவளுறுப்புக்களைக் கண்டு,
இப்பொழிலென் சிந்தனைக்கவள் தானே யெனத் தோன்றாநின்றதென்று,
அளவில்லாத
இன்பமடைந்து நிற்றல்.
(வ-று.)
காம்பிணை யாற்களி மாமயி லாற்கதிர்
மாமணியால்
வாம்பிணை யால்வல்லி யொல்குத
லான்மன்னு மம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன்
கயிலைப் பயில்புனமும்
தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றுமென் சிந்தனைக்கே.
(திருக். 38)
உயிரென வியத்தல்
என்பது, பொழில்கண்டு மகிழ்ந்து,
அப்பொழிலிடைச் சென்று புக்கு, அவளைக்கண்ட
துணையான், என்னுயி ரிவ்வாறு செய்தோ நிற்பதென
வியந்து கூறாநிற்றல்.
(வ-று.)
நேயத்த தாய்நென்ன
லென்னைப் புணர்ந்துநெஞ் சந்நெகப்போய்
ஆயத்த தாயமிழ் தாயணங் காயரன் அம்பலம்போல்
தேயத்த தாயென்றன் சிந்தைய தாய்த்தெரி
யிற்பெரிதும்
மாயத்த தாகி யிதோவந்து நின்றதென் மன்னுயிரே.
(திருக். 39)
தளர்வகன்றுரைத்தல்
என்பது, உயிரென வியந்து
சென்று, பூக்கொய்தன் முதலிய விளையாட்டை
யொழிந்து, யாருமில்லொரு
சிறைத் தனியே
|