பக்கம் எண் :
 
பொருளதிகாரம்251முத்துவீரியம்

நின்று, இவர் செய்யாநின்ற பெரிய தவம் யாதோவென, அவளைப் பெரும்பான்மை கூறித்
தளர்வு நீங்காநிற்றல்.

(வ-று.)

தாதிவர் போதுகொய் யார்தைய லாரங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந் தடியார் சுனைப்புன லாடல்செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல் லென்னத்தம் பொன்னடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத் தான்மலை யெய்துதற்கே. (திருக். 40)

(கு-ரை.) தம் பொன்னடிப்பாய் அம்பலத்தான் மலை எய்துதற்கு யாது இவர் மாதவம்
எனக் கூட்டுக.

மொழிபெற வருந்தல்

என்பது, தளர்வுநீங்கிய பின்னர்ச் சார்தலுறாநின்றவனோடு, சொற்பெறும் முறையாற்
சென்று சாரவேண்டிப், பின்னும் அவளைப் பெரும்பான்மை கூறி, ஒருசொல் வேண்டி
வருந்தா நிற்றல்.

(வ-று.)

காவிநின் றேர்தரு கண்டர்வண் டில்லைக்கண் ணார்கமலத்
தேவியென் றேயையஞ் சென்றதன் றேயறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடினென்
ஆவியன் றேயமிழ் தேயணங் கேயின் றழிகின்றதே. (திருக். 41)

(கு-ரை.) மா இயன்றன்ன - மான் நோக்கத்தால் இயன்றாற் போன்ற.

நாணிக்கண்புதைத்தல்

என்பது, தலைமகன் தன்முன்னின்று பெரும்பான்மை கூறக் கேட்ட தலைமகள்
பெருநாணின ளாதலின், அவன் முன்னிற்கலாகாது நாணி, ஒரு கொடியினொதுங்கித், தன்கண்
புதைத்து வருந்தாநிற்றல்.

(வ-று.)

அகலிடந் தாவிய வானோன் அறிந்திறைஞ் சம்பலத்தின்
இகலிடந் தாவிடை யீசற் றொழாரினின் னற்கிடமாய்
உகலிடந் தான்சென் றெனதுயிர் நையா வகையொதுங்கப்
புகலிடந் தாபொழில் வாயெழில் வாய்தரு பூங்கொடியே. (திருக். 42)