பொருளதிகாரம் | 266 | முத்துவீரியம் |
கொண்டே கேட்பது காரணமாக
நெருங்கிநின்று, ஒரு புலி ஒருவனை யெதிர்ப்பட்டதெனத்
தோழியவளை நடுங்க நாடல்.
(வ-று.)
ஆவா இருவர் அறியா அடிதில்லை
யம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின் றோனையுன்
னாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்ததந் தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட
வாறின்றொ ராண்டகையே. (திருக். 72) (16)
நடுங்கநாட்டம் முற்றிற்று.
17. மடற்றிறம்
என்பது, நடுங்கநாடவும், பெருநாணின
ளாதலின், தலைமகள் தன்குறை கூறமாட்டாது
நிற்ப,
இனி இவள் இறந்து படவுங் கூடுமென வுட்கொண்டு,
தலைமகனுடன் சொல்லாடத்
தொடங்கிய தோழி, தானும் பெருநாணினளாதலின்
பின்னும் தலைமகன் குறையுற
வேண்டிநிற்ப, அந்நிலைமைக்கண் தலைமகன் சென்று,
இந்நாளெல்லாம் என் குறை
நின்னால்
முடியுமென்று நின்னை வந்திரந்தேன்,
இது நின்னால் முடியாமையின், யான்
மடலூர்ந்தாயினும் இக்குறை முடித்துக் கொள்வேனெனத்
தோழிக்குக் கூறல்.
என்னை?
முன்னுற வுணரினும் அவன்குறை யுற்ற
பின்ன ரல்லது கிளவி தோன்றாது. (இறையனார்
களவியல்)
என்றாராகலின்,
மடற்றிறம்
844. ஆற்றா துரைத்தலும்
உலகின்மேல் வைத்தலும்
தன்றுணி புரைத்த லொடுவகை யுரைத்தலும்
அருளா லரிதென னடையா லரிதெனல்
அவயவ மெழுத லரிதென விலக்கலும்
உடம்படாது விலக்கலும் உடம்பட்டு
விலக்கலும்
திடம்பட வொன்பதுஞ் செப்புங்
காலை
வடம்படு முலைமேன் மடலா கும்மே.
(திருக்கோவையார் உரை)
என்பது, ஆற்றாதுரைத்தல், உலகின்மேல்
வைத்துரைத்தல், தன்றுணிபுரைத்தல், மடலேறும்
வகையுரைத்தல்,
|