பொருளதிகாரம் | 267 | முத்துவீரியம் |
அருளா லரிதென விலக்கல், மொழிநடை
யெழுதலரிதென விலக்கல்,
அவயவமெழுதலரிதென விலக்கல்,
உடம்படாது விலக்கல், உடம்பட்டு விலக்கல்,
இவை
யொன்பதும் மடற்றிறமாம்.
ஆற்றாதுரைத்தல்
என்பது, தலைமகள்மேல்
மடற்றிறங் கூறுகின்றானாகலின், அதற்கியைவுபட
அவ்விருவருழைச் சென்று, நீயிரருளாமையின் என்னுயிரழிகின்றது.
இதனை அறிமினெனத்,
தலைமகன் தனதாற்றாமை மிகுதியைக்
கூறல்.
(வ-று.)
பொருளா எனைப்புகுந்
தாண்டு புரந்தரன் மாலயன்பால்
இருளா யிருக்கும் ஒளிநின்ற சிற்றம் பலமெனலாம்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த்
துடியிடையீர்
அருளா தொழியின் ஒழியா தழியுமென்
ஆருயிரே. (திருக். 73)
உலகின்மேல் வைத்துரைத்தல்
என்பது, ஆற்றாமைகூறி, அது வழியாகநின்று,
ஆடவர் தம் உள்ளமாகிய மீன்
மகளிர்கண்வலைப்
பட்டால், அதனைப் பெறுதற்கு வேறு உபாயமில்லாதவிடத்து,
மடலூர்ந்தும்
அதனைப் பெறுவரென, உலகின்மேல் வைத்துக்
கூறாநிற்றல்.
(வ-று.)
காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின்
வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் றென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே. (திருக். 74)
தன்றுணிபுரைத்தல்
என்பது, முன் உலகின்மேல் வைத்துணர்த்தி,
அது வழியாக நின்று, என்னையும் ஒரு
பெண்கொடி பிறரிகழ மடலேறப் பண்ணாநின்ற தென,
முன்னிலைப் புறமொழியாகத்
தன்றுணிபு
கூறாநிற்றல்.
(வ-று.)
விண்ணை மடங்க விரிநீர்
பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு காலத்து மன்னிநிற்கும்
|