பொருளதிகாரம் | 268 | முத்துவீரியம் |
அண்ணல் மடங்க லதளம் பலவன்
அருளிலர்போல்
பெண்ணை மடன்மிசை யான்வரப் பண்ணிற்றொர்
பெண்கொடியே. (திருக். 75)
(கு-ரை.) மடங்கல் அதள் -
புலியின் தோல். சிங்கத்தின் தோல் எனவும்
வுரைப்பர்.
அவ்வழக்கு உளதேல் கொள்க.
மடலேறும் வகையுரைத்தல்
என்பது, தன்துணிபு கூறவும்
பெருநாணின ளாதலிற் சொல்லாடாத தோழிக்கு,
வெளிப்படத், தான் நாணிழந்தமை தோன்ற நின்று, யான்
நாளை நின்னூர்த்தெருவே
மடலுங்கொண்டு வருவேன்,
பின்வருவது காணெனத், தலைமகன் தான் மடலேறும்
வகை
கூறாநிற்றல்.
(வ-று.)
கழிகின்ற என்னையும்
நின்றநின் கார்மயில் தன்னையும்யான்
கிழியொன்ற நாடி யெழுதிக்கைக் கொண்டென் பிறவிகெட்டின்
றழிகின்ற தாக்கிய தாளம் பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரனுஞ் சீறூர்த் தெருவிடைப்
போதுவனே. (திருக். 76)
அருளா லரிதெனவிலக்கல்
என்பது, தலைமகன் வெளிப்பட நின்று
மடலேறுவேன் என்று கூறக் கேட்ட தோழி
இனியிவன்
மடலேறவுங் கூடுமென வுட்கொண்டு, தன்னிடத்து நாணைவிட்டு
வந்தெதிர்நின்று,
நீர் மடலேறினால் உம்முடைய
அருள் யாரிடத்ததாமென்று, அவனதருளை எடுத்துக்கூறி
விலக்கா நிற்றல்.
(வ-று.)
நடனாம் வணங்குந்தொல்
லோனெல்லை நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத் தரன்றில்லை மல்லற்கண்
ணார்ந்த பெண்ணை
உடனாம் பெடையொடொண் சேவலும் முட்டையுங் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே.
(திருக். 77)
மொழிநடையெழுத லரிதெனவிலக்கல்
என்பது, அருளெடுத்து விலக்கவும்
தன்வழி நில்லாமை கண்டு, அவன் வழியொழுகி
விலக்குவாளாக,
நுமதருள் கிடக்க, மடலேறுவார் மடலேறுதல்
மடலேறப்படுவார் உரு
வெழுதிக்
|