பொருளதிகாரம் | 269 | முத்துவீரியம் |
கொண்டன்றே; நுமக்கவள் மொழிநடையெழுத
முடியாதாகலின் நீயிர் மடலேறுமாறு
என்னோவென
விலக்கல்.
(வ-று.)
அடிச்சந்த மால்கண் டிலாதன காட்டிவந்
தாண்டுகொண்டென்
முடிச்சந்த மாமல ராக்குமுன்
னோன்புலி யூர்புரையும்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக்
கன்னி யனநடைக்குப்
படிச்சந்த மாக்கும் படமுள வோநும் பரிசகத்தே.
(திருக். 78)
(கு-ரை.) சந்தம் மால் கண்டிலாதன
அடி - மறையும் மாலும் காண இயலாதனவாகிய
திருவடி,
படிச்சந்தம் - ஒன்றன் வடிவை யுடைத்தாய் அது வென்றே
கருதப்படும்
இயல்புடையது.
அவயவமெழுத லரிதெனவிலக்கல்
என்பது, அவள் சொன்னடை கிடக்க,
இவை தாமெழுத முடியுமோ; முடியுமாயின் யான்
சொன்னபடியே தப்பாமல் எழுதிக் கொண்டு வந்தேறுமென்று
அவளவயவங் கூறாநிற்றல்.
(வ-று.)
யாழு மெழுதி யெழின்முத்
தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந் தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு
போதுகவே. (திருக். 79)
உடம்படாது விலக்கல்
என்பது, எழுதலாகாமை கூறிக்காட்டி,
அது கிடக்க, நும்மை யாம்
விலக்குகின்றேமல்லேம்,
யான் சென்று அவள் நினைவை யறிந்துவந்தாற்
பின்னர் நீயிர்
வேண்டிற்றைச் செய்யும், அவ்வளவும் நீவிர்
வருந்தா தொழியுமெனத், தானுடம்படாது
விலக்காநிற்றல்.
(வ-று.)
ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத்
திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசர்தில்லைக்
கார்வாய் குழலிக்குன் னாதர வோதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரினறி வார்பின்னைச் செய்க அறிந்தனவே.
(திருக். 80)
|