பொருளதிகாரம் | 270 | முத்துவீரியம் |
(கு-ரை.) கற்பித்துக் கண்டால்
வாய்தரின் ஆர் அறிவார் எனக் கூட்டுக.
உடம்பட்டு விலக்கல்
என்பது, உடம்படாது முன் பொதுப்பட
விலக்கி, முகங்கொண்டு, பின்னர்த்
தன்னோடவளிடை
வேற்றுமையின்மை கூறி, யான் குறைமுடித்துத்
தருவேன், நீவருந்த
வேண்டா வெனத்தோழி தானுடம்பட்டு விலக்கல்.
(வ-று.)
பைந்நா ணரவன்
படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்த பொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயா னழுந்தினும் என்னின்முன்னும்
இந்நா ளிதுமது வார்குழ லாட்கென்கண் இன்னருளே.
(திருக். 81) (17)
மடற்றிற முற்றும்.
18. குறைநயப்புக் கூறல்
என்பது, தலைமகனை மடல்
விலக்கிக் குறைநேர்ந்த தோழி, தலைமகளைக்
குறைநயப்பிக்க அவன் குறை கூறாநிற்றல்.
குறை நயப்பித்தலின் வகை
845. குறிப்பறித லோடு
மென்மொழி
கூறலும்
விரவிக் கூறலு மறியாள் போறலும்
வஞ்சித் துரைத்தலும் புலந்து கூறலும்
வன்மொழி கூறலும் மனத்தொடு நேர்தலும்
சொன்ன விருநான்குந் துறைகுறை
நயப்பென
மன்னிய பொருளில் வகுத்திசி
னோரே.
(திருக்கோவையார்
உரை)
என்பது, குறிப்பறிதல், மென்மொழியாற்
கூறல், விரவிக் கூறல். அறியாள் போறல்,
வஞ்சித்
துரைத்தல், புலந்துகூறல், வன்மொழியாற் கூறல்,
மனத்தொடு நேர்தல்
ஆகியவெட்டும் குறைநயப்பித்தலாம்.
குறிப்பறிதல்
என்பது, தலைமகனது குறைகூறத் துணியாநின்ற
தோழி, தெற்றெனக் கூறுவேனாயின், இவள்
இதனை
மறுக்கவுங் கூடு
|