பக்கம் எண் :
 
பொருளதிகாரம்272முத்துவீரியம்

வாய்வண் டனையதொர் நாவற் கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதொன் றாகிநின் றானப் பெருந்தகையே. (திருக். 84)

அறியாள்போறல்

என்பது, பேய்கண்டாற்போல நின்றானெனத், தலைமகன் நிலைமை கேட்ட தலைமகள்
பெருநாணின ளாதலி னிதனை அறியாதாளைப்போல, இஃதொரு கடல் வடிவிருந்தவாறு
காணாயெனத், தானொன்று கூறா நிற்றல்.

(வ-று.)

சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலி னேந்திழை தொல்லைப்பன்மா
வங்க மலிகலி நீர்தில்லை வானவ னேர்வருமே. (திருக். 85)

வஞ்சித்துரைத்தல்

என்பது, நாணினாற் குறை நேரமாட்டாது வருந்தாநின்ற தலைமகள், இவளும்
பெருநாணினளாதலி னென்னைக் கொண்டே கூறுவித்துப் பின் முடிப்பாளாய் இராநின்றாள்,
இதற்கு யானொன்றுஞ் சொல்லாதொழிந்தா லெம்பெருமா னிறந்து படுவனென உட்கொண்டு,
தன்னிடத்து நாணினைவிட்டுப், பாங்கற் கூட்டம் பெற்றுத் தோழியிற் கூட்டத்திற்குத்
துவளாநின்றா னென்பது தோன்றப், பின்னும் வெளிப்படக் கூறமாட்டாது, மாயவன்மேல்
வைத்து வஞ்சித்துக் கூறாநிற்றல்.

(வ-று.)

புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன் னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற் றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்றில்லை யம்பல முன்றிலம் மாயவனே. (திருக். 86)

புலந்துகூறல்

என்பது, வெளிப்படக்கூறாது வஞ்சித்துக் கூறுதலான், என்னோடு இதனை வெளிப்படக்
கூறாயாயின், நின் காதற்றோழியர்க்கு வெளிப்படக்கூறி, அவரோடு சூழ்ந்து, நினக்கு உற்றது