பொருளதிகாரம் | 273 | முத்துவீரியம் |
செய்வாய், யான் சொன்ன அறியாமையை
நின்னுள்ளத்துக் கொள்ளாது மறப்பாயாக, யான்
வேண்டுவது இதுவேயெனத் தோழி தலைமகளோடு புலந்து
கூறாநிற்றல்.
(வ-று.)
உள்ளப் படுவன வுள்ளி
யுரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி யேலிது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க் கருளா அரன்றில்லை காணலர்போல்
கொள்ளப் படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே.
(திருக். 87)
வன்மொழியாற் கூறல்
என்பது, புலந்து கூறாநின்ற
தோழி, அக்கொடியோன் அருளுறாமையான், மெய்யிற்
பொடியுங் கையிற் கிழியுமாய் மடலேறத் துணியா
நின்றான், அக்கிழிதா னின்னுடைய
வடிவென்றுரையு
முளதாயிருந்தது, இனி நீயு நினக்குற்றது செய்வாயாக,
யானறியேனென,
வன்மொழியாற் கூறாநிற்றல்.
(வ-று.)
மேவியந் தோலுடுக் குந்தில்லை
யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியந் தோன்றுங் கிழிநின் எழிலென் றுரையுளதால்
தூவியந் தோகையன் னாயென்ன பாவஞ்சொல் லாடல்செய்யான்
பாவியந் தோபனை மாமட லேறக்கொல் பாவித்ததே.
(திருக். 88)
மனத்தொடு நேர்தல்
என்பது, ஆற்றாமையான் மடலேறத் துணிகின்றானெனத்
தோழியால் வன்மொழி
கூறக்கேட்ட தலைமகள்,
அதற்குத் தானாற்றாளாய்த், தலைமகனைக் காணவேண்டித்,
தன்
மனத்தொடு கூறி நேரா நிற்றல்.
(வ-று.)
பொன்னார் சடையோன் புலியூர்
புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை யானொன் றுரைக்கிலன் வந்தயலார்
சொன்னா ரெனுமித் துரிசுதுன் னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
நீர்மை யினியவர்க்கே. (திருக். 89) (18)
குறைநயப்பித்தல் முற்றும்.
|