பக்கம் எண் :
 
பொருளதிகாரம்274முத்துவீரியம்

19. சேட்படை

என்பது, தலைமகளைக் குறைநயப்பித்துத் தன்னினாய கூட்டங் கூட்டலுறுந்தோழி,
தலைமகனது பெருமையும் தன் முயற்சி யருமையும் தோன்றல் காரணமாகவும்,
இத்துணையருமையுடையாள் இனிநமக் கெய்துதற்கு அருமையுடையளென இதுவே
புணர்ச்சியாக நீட்டியாது விரைய வரைந்து கோடல் காரணமாகவும், தலைமகனுக்கியைய
மறுத்துக் கூறல்.

அதன் வகை

846. தழைகொண்டு சேறலும் தகாதென மறுத்தலும்
     நிலத்தின்மை கூறலும் நினைவறிவு கூறலும்
     படைத்து மொழிதலும் பனிமதி நுதலியை
     எடுத்துநா ணுரைத்தலும் இசையாமை கூறலும்
     செவ்வியில ளென்றலும் சேட்பட நிறுத்தலும்
    அவ்வினிய மொழிநீ யவட்குரை யென்றலும்
    குலமுறை கிளத்தலுங் கோதண் டத்தொழில்
    வலிசொல்லி மறுத்தலும் மற்றவற் கிரங்கலும்
    சிறப்பின்மை கூறலும் சிறியளென் றுரைத்தலும்
    மறைத்தமை கூறி நகைத்துரை செய்தலும்
    நகைகண்டு மகிழ்தலும் நானவள் தன்னை
    அறியே னென்றலும் அவயவங் கூறலும்
    கண்ணயந் துரைத்தலும் கையுறை யெதிர்தலும்
    முகம்புக வுரைத்தலும் முகங்கண்டு கூறலும்
    வகுத்துரைத் தல்லொடு வண்டழை யவட்கு
    மிகுத்துரை செய்து விரும்பிக் கொடுத்தலும்
    தழைவிருப் புரைத்தலும் தானிரு பத்தா
    றிழைவளர் முலையா யிவைசேட் படையே.

என்பது, தழைகொண்டு சேறல் - சந்தனத்தழை தகாதென்று மறுத்தல், நிலத்தின்மை
கூறிமறுத்தல், நினைவறிவு கூறி மறுத்தல், படைத்துமொழியான் மறுத்தல், நாணுரைத்து
மறுத்தல், இசையாமைகூறி மறுத்தல், செவ்வியிலளென்று மறுத்தல், காப்புடைத்தென்று
மறுத்தல், நீயேகூறென்று மறுத்தல், குலமுறைகூறி மறுத்தல், நகையாடி மறுத்தல்,
இரக்கத்தொடு மறுத்தல், சிறப்பின்மைகூறி மறுத்தல், இளமை கூறி மறுத்தல், மறைத்தமைகூறி
நகைத்துரைத்தல், நகைகண்டு