பக்கம் எண் :
 
பொருளதிகாரம்275முத்துவீரியம்

மகிழ்தல், அறியாள்போன்று நினைவுகேட்டல், அவயவங்கூறல், கண்ணயந்துரைத்தல்,
தழையெதிர்தல், குறிப்பறிதல், குறிப்பறிந்துகூறல், வகுத்துரைத்தல், தழையேற்பித்தல்,
தழைவிருப்புரைத்தல் ஆகிய விருபத்தாறுஞ் சேட்படையாம்.

தழைகொண்டுசேறல்

என்பது, மேற் சேட்படை கூறத்துணிந்த தோழியிடைச் சென்று, அவள் குறிப்பறிந்து,
பின்னும் குறையுறவு தோன்ற நின்று, நும்மால் அருளத்தக்காரை யலையாதே இத்தழை
வாங்கிக் கொண்டு என்குறை முடித்தருளுவீராமென்று, மறுத்தற்கிடமறச், சந்தனத்தழைகொண்டு
தலைமகன்செல்லா நிற்றல்.

(வ-று.)

தேமென் கிளவிதன் பங்கத் திறையுறை தில்லையன்னீர்
பூமென் றழையுமம் போதுங்கொள் ளீர்தமி யேன்புலம்ப
ஆமென் றருங்கொடும் பாடுகள் செய்துநுங் கண்மலராம்
காமன் கணைகொண் டலைகொள்ள வோமுற்றக் கற்றதுவே. (திருக். 90)

சந்தனத்தழை தகாதென்று மறுத்தல்

என்பது, தலைமகன் சந்தனத்தழைகொண்டு செல்ல, அது வழியாக நின்று,
சந்தனத்தழை யிவர்க்கு வந்தவாறென்னோ வென்று ஆராயப்படுதலான், இத்தழை எமக்
காகாதெனத், தோழி மறுத்துக் கூறல்.

(வ.று.)

ஆரத் தழையராப் பூண்டம் பலத்தன லாடியன்பர்க்
காரத் தழையன் பருளிநின் றோன்சென்ற மாமலயத்
தாரத் தழையண்ணல் தந்தால் இவையவள் அல்குற்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தா ரெனவரும் ஐயுறவே. (திருக். 91)

நிலத்தின்மைகூறி மறுத்தல்

என்பது, சந்தனத்தழை தகாதென்றதல்லது மறுத்துக் கூறியவாறன்றென மற்றொருதழை
கொண்டுசெல்ல, அது கண்டு இக்குன்றிலில்லாத தழையை யெமக்கு நீர்தந்தால், எங்குடிக்கு
இப்பொழுதே பழியாம், ஆதலான் அத்தழை எமக்காகாதென மறுத்துக்கூறல்.