பக்கம் எண் :
 
பொருளதிகாரம்276முத்துவீரியம்

(வ-று.)

முன்றகர்த் தெல்லா இமையோ ரையும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்றகத் தில்லா வகைசிதைத் தோன்றிருந் தம்பலவன்
குன்றகத் தில்லாத் தழையண்ணல் தந்தாற் கொடிச்சியருக்
கின்றகத் தில்லாப் பழிவந்து மூடுமென் றெள்குதுமே. (திருக். 92)

நினைவறிவுகூறி மறுத்தல்

என்பது, இத்தழை தந்நிலத்துக்கு உரித்தன்று என்ற தல்லது மறுத்துக்
கூறியவாறன்றென உட்கொண்டு, அந்நிலத்திற்குரிய தழைகொண்டு செல்ல, அதுகண்டு
தானுடன் பட்டாளாய், யான்சென்று அவள் நினைவறிந்தால் நின்னெதிர் வந்து கொள்வேன்,
அஃதல்லது கொள்ளப் பயப்படுவேனென மறுத்துரைத்தல்.

(வ-று).

யாழார் மொழிமங்கை பங்கத் திறைவன் எறிதிரைநீர்
ஏழா யெழுபொழி லாயிருந் தோனின்ற தில்லையன்ன
சூழார் குழலெழிற் றொண்டைச்செவ் வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா தெதிர்வந்து கோடுஞ் சிலம்ப தருந்தழையே. (திருக். 93)

படைத்து மொழியான் மறுத்தல்

என்பது, நினைவறிந்தல்லது ஏலே மென்றது, மறுத்துக் கூறிய வாறன்று,
நினைவறிந்தால் ஏற்பேமென்ற வாறாமென வுட்கொண்டு நிற்பச் சிறிது புடைபெயர்ந்து,
அவள் நினைவறிந்தாளாகச் சென்று, இத்தழை யானேயன்றி அவளும் விரும்புமாயினும்,
இது குற்றாலத்துத் தழையாதலான், இத்தழை யிவர்க்கு வந்தவாறென்னோவென
ஆராயப்படு மாதலான், இத்தழை யெமக்காகாதென்று மறுத்துக் கூறாநிற்றல்.

(வ-று.)

எழில்வா யிளவஞ்சி யும்விரும் பும்மற் றிறைகுறையுண்
டழல்வா யவிரொளி யம்பலத் தாடுமஞ் சோதியந்தீங்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல தில்லையிப் பூந்தழையே. (திருக். 94)