பொருளதிகாரம் | 277 | முத்துவீரியம் |
நாணுரைத்து மறுத்தல்
என்பது, பலபடியுந்
தழைகொண்டுசெல்ல, மறுத்துக்கூறிய வழி, இனித்
தழையொழிந்து, கண்ணியைக் கையுறையாகக் கொண்டு
சென்றால், அவள் மறுக்கும்
வகையில்லையெனக் கழுநீர் மலரைக் கண்ணியாகப்
புனைந்துகொண்டுசெல்ல, அதுகண்டு,
செவிலியர் சூட்டிய கண்ணியின்மேல் யானொன்று
சூட்டினும் நாணாநிற்பள், நீர் கொணர்ந்த
இக்கண்ணியை, யாங்ஙனஞ் சூடு மெனத் தலைமகள் நாணுரைத்து
மறுத்துக் கூறாநிற்றல்.
(வ-று.)
உறுங்கண்ணி வந்த கணையுர
வோன்பொடி யாயொடுங்கத்
தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல வன்மலைச்
சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென் வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள் நாணுமிக்
குன்றிடத்தே. (திருக். 95)
இசையாமைகூறி மறுத்தல்
என்பது, தலைமகள் நாணுரைத்து மறுத்த
தோழி, அவள் நாணங்கிடக்க, யாங்கள்
வேங்கைமலரல்லது தெய்வத்திற்குரிய வெறிமலர் சூட
அஞ்சுது மாதலான், இக்கண்ணி
யெங்குலத்திற்கு இசையாதென மறுத்துக்கூறல்.
(வ-று.)
நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை
நாகநண்ணி
மறமனை வேங்கை யெனநனி யஞ்சுமஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொ டணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை யதளம் பலவன் நெடுவரையே. (திருக். 96)
செவ்வியிலளென்று மறுத்தல்
என்பது, அணங்கு அலர் தங்குலத்திற்கு
இசையாதென்ற தல்லது மறுத்துக்
கூறியவாறன்றென
மாந்தழையோடு மலர் கொண்டு செல்ல, அவை கண்டுடன்படாளாய்,
அன்னம், பிணை, கிள்ளை, தந்தொழில்பயில, இன்று
செவ்வி பெற்றன வில்லை, அது
கிடக்க, என்னுழை நீர் வந்தவாறும் யான் உமக்குக் குறை நேர்ந்தவாறும்
இன்னு மறிந்திலள்,
அதனாற் செவ்விபெற்றாற்
கொணருமென மறுத்துக் கூறாநிற்றல்.
|