பக்கம் எண் :
 
பொருளதிகாரம்278முத்துவீரியம்

(வ-று.)

கற்றில கண்டன்ன மென்னடை கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப் பெறாகிள்ளை பிள்ளையின்றொன்
றுற்றிலள் உற்ற தறிந்திலள் ஆகத் தொளிமிளிரும்
புற்றில வாளர வன்புலி யூரன்ன பூங்கொடியே. (திருக். 97)

காப்புடைத்தென்று மறுத்தல்

என்பது, செவ்வியிலளென்றது, செவ்விபெற்றாற் குறையில்லை யென்றாளாமென
உட்கொண்டு நிற்பக், கதிரவன் மறைந்தான், இவ்விடங் காவலுடைத்து, நும்மிடனுஞ் சேய்த்து,
எம்மையன்மாருங் கடியர், யாம் தாழ்ப்பின், அன்னையு முனியும், நீரும் போய் நாளை
வாருமென இசைய மறுத்துக்கூறல்.

(வ-று.)

முனிதரும் அன்னையும் என்னையர் சாலவும் மூர்க்கரின்னே
தனிதரும் இந்நிலத் தன்றைய குன்றமுந் தாழ்சடைமேல்
பனிதரு திங்க ளணியம் பலவர் பகைசெகுக்குங்
குனிதரு திண்சிலைக் கோடுசென் றான்சுடர்க் கொற்றவனே. (திருக். 98)

நீயே கூறென்று மறுத்தல்

என்பது, இவள் இவ்விடத்து நிலைமையை மறையாது எனக்குரைப்பாளாயது
என்கட்கிடந்த பரிவினானன்றே, இத்துணைப் பரிவுடையாள் எனக்கிது முடியாமை
யில்லையெனத் தலைவனுட் கொண்டுபோய்ப் பிற்றைஞான்று செல்லத், தோழி யான்
குற்றேவல் மகளாகலிற் றுணிந்து சொல்லமாட்டுகின்றிலேன், இனி நீயே சென்று நின்
குறையுள்ளது கூறெனத் தான் உடன்படாது மறுத்துக் கூறல்.

(வ-று.)

அந்தியின் வாயெழி லம்பலத் தெம்பரன் அம்பொன்வெற்பில்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ் சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே மொழிசென்றம் மொய்குழற்கே. (திருக். 99)