பக்கம் எண் :
 
பொருளதிகாரம்286முத்துவீரியம்

வரைவுகடாதல், தாய்ச்சங்கூறி வரைவுகடாதல், இற்செறிவறி வித்து வரைவுகடாதல், தமர்
நினைவுரைத்து வரைவுடகடாதல், எதிர்கோள்கூறி வரைவுகடாதல், ஏறுகோள்கூறி
வரைவுகடாதல், அயலுரை யுரைத்து வரைவுகடாதல், தினைமுதிர் வுரைத்து வரைவுகடாதல்,
பகல் வரல் விலக்கி வரைவுகடாதல், தினையொடு வெறுத்து வரைவுகடாதல், வேங்கையொடு
வெறுத்து வரைவுகடாதல், இரக்கமுற்று வரைவுகடாதல், கொய்தமைகூறி வரைவுகடாதல்,
பிரிவருமைகூறி வரைவுகடாதல், மயிலொடுகூறி வரைவுகடாதல், வறும் புனங்கண்டு
வருந்தல், பதிநோக்கி வருந்தல் ஆகிய முப்பத்திரண்டும் பகற்குறியாம்.

குறியிடங்கூறல்

என்பது, தழை விருப்புரைத்த தோழி, யாங்கள் விளையாடு மிடத்தொரு கரிய
பொழிலிரவி நுழையா விருளாய், நடுவணோர் பளிக்குப்பாறையை யுடைத்தாயிருக்கும்,
அவ்விடத்து வருவாயாக வெனத் தலைமகனுக்குக் குறியிடங் கூறல்.

(வ-று.)

வானுழை வாளம் பலத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புறம் நாப்பண்வண் டாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கான்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில் காட்டுமொர் கார்ப்பொழிலே. (திருக். 116)

ஆடிடம்படர்தல்

என்பது, தலைமகனுக்குக் குறியிடங் கூறின தோழி, யாம் புனத்தின்கட்போ யூசலாடி,
அருவியேற்று விளையாடுவேம், போது வாயாக வெனத் தலைமகளை யாயத்தோடுங்
கொண்டுசென்று ஆடிடம் படராநிற்றல்.

(வ-று.)

புயல்வளர் ஊசன்முன் னாடிப்பொன் னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றினின் றேற்றும் அருவி திருவுருவின்
கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரந் தீர்த்தருளும்
தயல்வளர் மேனியன் அம்பலத் தான்வரைத் தண்புனத்தே. (திருக். 117)