பக்கம் எண் :
 
பொருளதிகாரம்287முத்துவீரியம்

குறியிடத்துக் கொண்டுசேறல்

என்பது, ஆடிடம் படர்ந்த தோழி, தலைமகனுக்குத் தான் சொன்ன
குறியிடத்திவளைக் கொண்டு சென்றுய்க்கும் பொழுது, ஆயத்தாரைத் தம்மிடத்தினின்று
நீக்க வேண்டுதலின், தினைகாத்தல் முதலாகிய விளையாட்டுக்களைத் தான் கூறவே,
அவ்வவ் விளையாட்டிற் குரியார் தலைமகள் அவ்வவ் விடங்களிலே வருவளெனக்
கருதித்தோழி சொன்னவகையே, அவ்வவ் விளையாட்டு விருப்பினா லெல்லாரும் பிரிவர்,
அவ்வகை, ஆய வெள்ளத்தைப் பிரிவித்துத், தமியளாய் நின்ற தலைமகளையுங் கொண்டு,
யாமும் போய் மயிலாடல் காண்பேமென அக்குறியிடத்துச் சேறல்.

(வ-று.)

தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணி யம்பல வன்றன்வெற்பில்
புனைவளர் கொம்பரன் னாயன்ன காண்டும் புனமயிலே. (திருக். 118)

(கு-ரை.) பாலுண் குழவி பசுங்குடர் பொருதென நோயுண்மருந்து தாயுண்டாங்குத்
தொழுது எழுவார்க்கு வினை நீருகத்தான் நீறணிபவன் எனவே இறைவனது பெருங் கருணை
புலப்படும். இறைவன் நீறணிவன் என்பதை ‘உருவவிர் பவள மேனி ஒளி நீறணிந்து’
‘பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்’ என்றற் றொடக்கத்துத் திருவாக்குகளான்
அறியலாம்.

இடத்துய்த்து நீங்கல்

என்பது, குறியிடைக்கொண்டு சென்ற தோழி, யான் அவ்விடத்துச் சென்று
நின்குழற்குப் பூக்கொய்து வருவேன், அவ்விடம், மூங்கின் முத்துதிர்தலால் நினது
மெல்லடிக்குத் தகாதாதலால் நீ யென்னோடு வாராதிங்கே நின்று பூக்கொய்வாயாகவெனத்,
தலைமகளைக் குறியிடத்து நிறுத்தித் தானீங்கா நிற்றல்.

(வ-று.)

நரல்வே யினநின தோட்குடைந் துக்கநன் முத்தஞ்சிந்திப்
பரல்வே யறையுறைக் கும்பஞ் சடிப்பரன் றில்லையன்னாய்
வரல்வேய் தருவனிங் கேநிலுங் கேசென்றுன் வார்குழற்கீர்ங்
குரல்வே யளிமுரல் கொங்கார் தடமலர் கொண்டுவந்தே. (திருக். 119)