பொருளதிகாரம் | 288 | முத்துவீரியம் |
உவந்துரைத்தல்
என்பது, தோழி
தலைமகளைக் குறியிடை நிறுத்தி நீங்கா நிற்பத்
தலைமகன்
சென்றெதிர்ப்பட்டு, இக்குவட்டை மாசுணப் பள்ளியாகவும் என்னைத்
திருமாலாகவும்,
நினைந்தோ, நீ இப்பொழிற்கண் வந்து நின்றதெனத்,
தலைமகளை யுவந்து கூறல்.
(வ-று.)
படமா சுணப்பள்ளி யிக்குவ டாக்கியப்
பங்கயக்கண்
நெடுமா லெனவென்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே
இடமா விருக்கலுற் றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து வைகிற்றிவ்
வார்பொழிற்கே. (திருக். 120)
மருங்கணைதல்
என்பது, உவந்துரைப்பக்
கேட்ட தலைமகள், பெருநாணி னளாதலிற் கண்புதைத்தொரு
கொடியினொதுங்கி வருந்தாநிற்பச், சென்று
சார்தலாகாமையின், தலைமகன் அவ்வருத்தந்
தணிப்பான் போன்று, முலையொடு முனிந்து, அவளிறுமருங்குல்
தாங்கியணையா நிற்றல்.
(வ-று.)
தொத்தீன் மலர்ப்பொழிற்
றில்லைத்தொல் லோனரு ளென்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின்
மூடித்த னேரளப்பாள்
ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின்
றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காளென்னுக்
கின்னும் பெருக்கின்றதே. (திருக். 121)
பாங்கியறிவுரைத்தல்
என்பது, மருங்கணைவு, இறுதிக்கட்
டலைமக ளையந்தீர, அவளைக் கோலஞ் செய்து,
இது நின்றோழி செய்த கோலமே, நீ கலங்காதொழிகெனத்,
தலைமகன் றான் தோழியோடு
தலைப்பெய்தமை தோன்றக்கூறல்.
(வ-று.)
அளிநீ டளகத்தின் அட்டிய தாது
மணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
மாலையும் தண்ணறவுண்
|