பொருளதிகாரம் | 289 | முத்துவீரியம் |
களிநீ யெனச்செய்த வன்கடற்
றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு கோலம்
திருநுதலே. (திருக். 122)
உண்மகிழ்ந்துரைத்தல்
என்பது, பாங்கியறிவுரைப்பக்
கேட்டதலைமகள் இனி நமக்கொரு குறையில்லையென
வுட்கொண்டு முகமலர, அம்முகமலர்ச்சி கண்டு,
அவளைக் கழுநீர்மலராகவும் தான் அதன்
நறவைப் பருகும் வண்டாகவும் புனைந்து, தலைமகன்
தன்னுள் மகிழ்ந்து கூறாநிற்றல்.
(வ-று.)
செழுநீர் மதிக்கண்ணிச்
சிற்றம் பலவன் திருக்கழலே
கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி
வாய்க்கொள்ளும் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன் கண்மரு
விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை யளிகுலமே. (திருக். 123)
ஆயத்துய்த்தல்
என்பது, மலரளிமேல்
வைத்து மகிழ்வுற்றுப் பிரிகின்ற தலைமகன்,
யாம்
இத்தன்மையேமாதலின் நமக்குப்
பிரிவில்லை, இனிப் பொழிலிடத்து விளையாடுமாயம்
பொலிவு பெறப்போய், அவரோடு சேர்ந்து
விளையாடுவாயெனத், தலைமகளை ஆயத்துச்
செலுத்தல்.
(வ-று.)
கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை
விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்மெழில் தந்தென
விப்பிறப்பில்
அழுந்தா வகையெனை யாண்டவன் சிற்றம் பலமனையாய்
செழுந்தா தவிழ்பொழில் ஆயத்துச்
சேர்க திருத்தகவே. (திருக். 124)
தோழிவந்து கூடல்
என்பது, தலைமகனைப்
பிரிந்த தலைமகள், தானும் பூக்கொய்யா நின்றாளாக,
பிரிவாற்றாமையானும், பெருநாணினானும், தடுமாறி
அரும்புகளைப் பறிப்ப, யான்நின்
குழற்காம் பூக்கொண்டுவந்தேன், நீ விரல்
வருந்த அரும்புகளைப் பறிக்க வேண்டாவெனத்
தோழிவந்து கூடல்.
|