பக்கம் எண் :
 
பொருளதிகாரம்290முத்துவீரியம்

(வ-று.)

பொன்னனை யான்றில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த
மின்னனை யானருள் மேவலர் போன்மெல் விரல்வருந்த
மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந் தாழ்குழற் கேய்வனவே. (திருக். 125)

ஆடிடம்புகுதல்

என்பது, கொய்துவந்த மலருங் குழற்கணிந்து, இனிநின் சிறுமருங்குல் வருந்தாமல்
மெல்லச்செல்வாயெனத், தோழி தலைமகளையுங்கொண்டு ஆடிடம்புகா நிற்றல்.

(வ-று.)

ஆறுகால் நிறைமல ரைம்பால் நிறையணிந் தேனணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல் லாயமெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக வென்சிரத்தின்
உறுகால் பிறர்க்கரி யோன்புலி யூரன்ன ஒண்ணுதலே. (திருக். 126)

தனிகண்டுரைத்தல்

என்பது, தலைமகளை ஆயத்துய்த்துத் தலைமகன்பாற் சென்று, ஈதெம்மூர், இதன்கண்
யாம் அருந்தும் தேனும், கிழங்கும் பருகி, இன்று எம்மொடு தங்கி, நாளை நின்னூருக்குப்
போவாயென, உலகியல் கூறுவாள்போன்று வரைவுபயப்பக் கூறல்.

(வ-று.)

தழங்கும் அருவியெஞ் சீறூர்பெரும இதுமதுவும்
கிழங்கும் அருந்தி யிருந்தெம்மொ டின்று கிளர்ந்துகுன்றர்
முழங்குங் குரவை யிரவிற்கண் டேகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரானெரி யாடிதென் றில்லை மணிநகர்க்கே. (திருக். 127)

பருவங்கூறிவரவு விலக்கல்

என்பது, உலகியல் கூறுவாள்போன்று குறிப்பால் வரைவு கடாவி, இனி
இவ்வாறொழுகாது வரைவொடு வருவாயெனத், தலைமகள் பருவங்கூறித் தலைமகனைத்
தோழி வரவுவிலக்கல்.