பக்கம் எண் :
 
பொருளதிகாரம்299முத்துவீரியம்

     ஆறுபார்த் துற்ற வச்சக் கிளவியும்
     தன்னுட் கையா றெய்திடு கிளவியும்
     நிலைகண் டுரைத்தலு நெடுங்கடற் சேர்த்தலும்
     அலரறி வித்தலு மாறைந் தோடு
     மூன்று மிரவுக் குறியென மொழிப.

என்பது, இரவுக்குறி வேண்டல், வழியருமைகூறி மறுத்தல், நின்று நெஞ்சுடைதல்,
இரவுக்குறி நேர்தல், உட்கோள்வினாதல், உட்கொண்டு வினாதல், குறியிடங்கூறல்,
இரவுக்குறியேற்பித்தல், இரவரவுரைத்தல், ஏதங்கூறிமறுத்தல், குறைநேர்தல், குறை
நேர்ந்தமைகூறல், வரவுணர்ந்துரைத்தல், தாய்துயிலறிதல், துயிலெடுத்துச்சேறல்,
இடத்துய்த்து நீங்கல், தளர்வகன்றுரைத்தல், மருங்கணைதல், முகங்கண்டுமகிழ்தல்,
பள்ளியிடத்துய்த்தல், வரவுவிலக்கல், ஆற்றாதுரைத்தல், இரக்கங்கூறி வரைவுகடாதல், நிலவு
வெளிப்படவருந்தல், அல்லகுறியறிவித்தல், கடலிடைவைத்துத் துயரறிவித்தல், காமமிக்க
கழிபடர் கிளவி, காப்புச்சிறைமிக்க கையறு கிளவி, ஆறுபார்த்துற்றவச்சக் கிளவி,
தன்னுட்கையாறெய்திடு கிளவி, நிலைகண்டுரைத்தல், இரவுறு துயரங்கடலொடு சேர்த்தல்,
அலரறிவுறுத்தல், ஆகிய முப்பத்துமூன்று மிரவுக்குறியாம்.

இரவுக்குறிவேண்டல்

என்பது, பதிநோக்கி வருந்திய தலைமகன், இற்றை யிரவிற்கு யானுங்கள் சீறூர்க்கு
விருந்து, என்னை யேற்றுக்கொள்வாயாக வெனத், தோழியை இரவுக்குறி வேண்டல்.

(வ-று.)

மருந்துநம் அல்லற் பிறவிப் பிணிக்கம் பலத்தமிர்தாய்
இருந்தனர் குன்றினின் றேங்கும் அருவிசென் றேர்திகழப்
பொருந்தின மேகம் புதைந்திருள் தூங்கும் புனையிறும்பின்
விருந்தினன் யானுங்கள் சீறூ ரதனுக்கு வெள்வளையே. (திருக். 148)

வழியருமைகூறி மறுத்தல்

என்பது, தலைமகனிரவுக்குறிவேண்ட, யாங்கள் வாழும் பதி ஏற்றிழிவுடைத்தாகலின்,
அவ்விடத்து நினக்குச் சிந்தைக்கு மேறற்கரிதெனத், தோழி வழியருமைகூறி மறுத்தல்.