பக்கம் எண் :
 
பொருளதிகாரம்300முத்துவீரியம்

(வ-று.)

விசும்பினுக் கேணி நெறியன்ன சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந் தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கும் ஏறற் கரிதெழில் அம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான் மலயத்தெம் வாழ்பதியே. (திருக். 149)

(கு-ரை.) இசும்பினில் - வழுக்கினால்.

நின்று நெஞ்சுடைதல்

என்பது, வழியருமை கூறக்கேட்ட தலைமகன், எய்தற்கரியாளை விரும்பி நீ
மெலிகின்ற இதற்கு யானாற்றேனெனக் கூறி, தனதிறந்துபாடு தோன்ற நின்று,
தன்னெஞ்சுடைந்து வருந்தல்.

(வ-று.)

மாற்றேன் எனவந்த காலனை ஓல மிடவடர்த்த
கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன் கொடுங்குன்றின் நீள்குடுமி
மேற்றேன் விரும்பும் முடவனைப் போல மெலியுநெஞ்சே
ஆற்றேன் அரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கே. (திருக். 150)

இரவுக்குறி நேர்தல்

என்பது, தலைமக னெஞ்சுடைந்து வருந்தக்கண்டு, இவனிறந்துபடவும்,
கூடுமெனவுட்கொண்டு, நீ யாளிகணிரைத்து நின்று யானைகளைத் தேடுமிரவின்கண் வந்து
மீள்வேனென்னா நின்றாய், இதற்குத் தீவினையேன் இயம்புவதெவனோவென்று, மறுத்த
வாய்பாட்டால் தோழி இரவுக்குறி நேர்தல்.

(வ-று.)

கூளி நிரைக்கநின் றம்பலத் தாடி குரைகழற்கீழ்த்
தூளி நிரைத்த சுடர்முடி யோயிவள் தோணசையால்
ஆளி நிரைத்தடல் ஆனைகள் தேரும் இரவில்வந்து
மீளி யுரைத்தி வினையேன் உரைப்பதென் மெல்லியற்கே. (திருக். 151)

உட்கோள் வினாதல்

என்பது, இரவுக்குறி நேர்ந்த தோழி, தங்கள் நிலத்துமக்கள் கோலத்தனாய்
வருதற்கவனுட்கொள்வது காரணமாக, நின்னூ