| 
			 என்னை, 
‘‘தன்மகன் ஆசான் மகனே மன்மகன் 
பொருள்நனி
கொடுப்போன் வழிபடு வோனே 
உரைகோ ளாளற் குரைப்பது நூலே. 
மடிமானி பொச்சாப்பன் காமுகன்
கள்வன் 
அடுநோய்ப் பிணியாளன் ஆறாச் சினத்தன் 
தடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டோரெண்மர் 
நெடுநூலைக் கற்க லாகா தாரே’’ 
என்றாராகலின், 
கோடன்மரபு, பொழுதொடுசேறல் முதல் கேட்டவை கேட்டவை 
போற்றிக்கோடல் 
இறுதியாகவுள்ள
குணங்களை யுடையனாதலாம். 
என்னை, 
‘‘கோடன் மரபு கூறுங் காலைப் 
பொழுதொடு சென்று வழிபடன்
முனியான் 
முன்னும் பின்னு மிரவினும் பகலினும் 
அகலா னாகி யன்பொடு புணர்ந்தாங் 
காசற வுணர்ந்தோன் வாவென வந்தாங் 
கிருவென விருந்து சொல்லெனச்
சொல்லிப் 
போவெனப் போகி நெஞ்சு களனாகச் 
செவிவா யாகக் கேட்டவை கேட்டவை 
போற்றிக் கோட லதுவதன் பண்பே’’ 
என்றாராகலின். 
சிறப்புப்பாயிரம் ஆக்கியோன்
பெயர் முதலிய எட்டுப் பொருளையும் விளக்கித் 
தன்னாலுரைக்கப்படும்
நூற்கின்றி யமையாதிருப்பது. 
என்னை, 
‘‘ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை 
நூற்பெயர் யாப்பே நுதலிய
பொருளே 
கேட்போர் பயனோ டாயெண்
பொருளும் 
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே’’ 
என்றாராகலின். 
			
				
				 |