நூல்செய்தான் பாயிரஞ்செய்யில்
தன்னைப் புகழ்ந்தானாம்.
என்னை,
‘‘தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினுந்
தான்றற் புகழ்த றகுதி யன்றே’’
என்றாராகலின்.
பாயிரஞ்செய்வார் தன்னாசிரியனும்,
தன்னோ டொருங்கு, கற்ற ஒருசாலை மாணாக்கரும், தன்
மாணாக்கரும், தகுந்த உரைகாரருமாகிய இவராம்,
இவருள் இந்நூற்பாயிரஞ் செய்தார்
தகுமுரைகாரராகிய
திருநெல்வேலி மகாவித்துவானாகிய திருப்பாற்கடனாதன்
கவிராயர்.
(இதன் பொருள்) விசாலமாகிய உலகோர் வியப்புற ஒளியைக்
கக்கிவரும்
இரவியினொளியைத்
தரும் திருமேனியையுடைய தானொரு முதலேயாகி, இளம்பிறை
வேய்ந்த சடிலச் சிவபிரான் அலர்தரு தன்மையின்
அகக்கட்டோன்றிய அக்கியான இருள்
நீங்க, அறம்
பொருள் இன்பம் வீடாகிய நாற்பொருளும் நீக்கமறக்
கூறிய பதினெண்ணிலத்து
மொழிகளுள்ளும், வடக்குத் திருவேங்கடமும்,
தெற்குக் கன்னியாகுமரியும் ஆகிய
எல்லைக்குட்பட்ட
தமிழ் ஐந்தையும் விளங்கச்செய்து தருகென, இளவராலுகளுங்
கழனிசூழ்
நெல்லையிலிருப்போன், வியாகரணம் வல்லோன்,
சிவபிரான் வேய்ந்த கங்கையில்
வந்தோன்,
சுப்பிரமணிய தேசிகன் கேட்க, அகத்திய நூல்வழி முத்துவீரியம்,
எனத்
தன்னாமம் நிறீஇக் கூறினான்; உறையூர் வாசமாகிய
‘முத்துவீர மாமுனி’ என்னும்
இயற்பெயருடையான்
எனவறிக.
(விளக்கவுரை) ஆயிரமுகம் -
ஆயிர வுறுப்புக்கள்: எண்ணிக்கை மிகுதி கூற வந்தது;
வரையறையன்று. குரீஇ - குருவி.
பொதுப்பாயிரத்தை நூல்,
நுவல்வோன், நுவலும் திறம், கொள்வோன், கோடல்
மரபு
என ஐந்தாகப் பகுப்பர் நன்னூலார். இவ்வாசிரியர்
தொல்காப்பிய மரபைப் பின்பற்றியுள்ளார்.
ஐவகையாகப் பகுத்தற்குரிய காரணத்தைச் சங்கர நமச்சிவாயர்
விளக்குவர். அது வருமாறு:-
‘‘ஈவோன் றன்மை யீத லியற்கை
கொள்வோன் றன்மை கோடன்
மரபென
ஈரிரண் டென்ப பொதுவின் றொகையே’’
என்பாரு முளராலோவெனின், பாயிரங் கூறுதல் நூல்கட்கன்றிப்
பிறவற்றிற்கன்றே?
அங்ஙனமாதலின், நூல்களின்
வரலாறொன்றுமே கூறவேண்டும்; அதனோடு ஆசிரியன்
வரலாறு
முதலிய நான்கினையும் உடன்
|